தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை! • ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்குக; எடப்பாடியாரிடம் நேரில் வலியுறுத்தல்: • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தேசிய அளவிலான போட்டியில் எஸ்.எம். ஜஸ்வின் தங்கப்பதக்கம் வென்று சாதனை! • ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்குக; எடப்பாடியாரிடம் நேரில் வலியுறுத்தல்: • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்!
விளம்பரங்கள்
அமெரிக்காவில் நடனப்பயிற்சி! பூர்வீக மண்ணில் அரங்கேற்றம்!

அமெரிக்காவில் நடனப்பயிற்சி! பூர்வீக மண்ணில் அரங்கேற்றம்!

Radheyan 10 Jul 2022 | 05:02 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், ஆவல்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் திரு.சூரப்பன். திமுக பிரமுகரான திரு.சூரப்பன் அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.  இவரின் துணைவியார் V.A.பார்வதி அம்மாள் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர்களது மகன் திரு.N.S.ராஜசேகரன், இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர், ஆராய்ச்சிப்படிப்புக்காக அமெரிக்கா சென்று, அந்நாட்டின் குடியுரிமை பெற்று அலபாமா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்


இவரது மகள் சிநேகா அமெரிக்கப்பள்ளி ஒன்றில் +2 படித்துவருகிறார். பரதநாட்டியத்தில் மிகுந்த விருப்பமுடைய திரு.இராஜசேகரன், தனது மகளை அமெரிக்காவில் புகழ்பெற்ற நாட்டியானந்தா நடனப்பள்ளியில் சேர்த்து, குரு.திருமதி.ஷீலா ரூபினிடம் பயிற்சி பெற்று வந்தார். மிகுந்த ஆர்வமுடன் பரதக்கலையை கற்றுவந்த சிநேகா, கொரோனோ காலத்தில் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இதற்கிடையே தனது மகள் சிநேகா-வின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை தான் பிறந்த பூர்வீக ஊரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்த விரும்பிய திரு.இராஜசேகரன் தம்பதியினர், அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாக செய்துவந்தனர்.

இன்று மாலை 3 மணியளவில் நாமக்கல், பொம்மக்குட்டைமேட்டிலுள்ள ஸ்ரீலட்சுமி மஹாலில், சென்னை, கலாச்சேத்திரா அரங்கேற்ற ஆசிரியர் ஷாலி விஜயன் முன்னிலையில் நடைபெறவுள்ள அரங்கேற்ற நிகழ்ச்சியை  மாநிலங்கவை உறுப்பினர் R.K.Nராஜேஷ்குமார் தலைமை தாங்கி நடத்தி வைக்கின்றார். இவ்விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும், இவ்விழாவில் மாநில சுற்றுலாத்துறை மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.







குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Bharathanaatiam thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண