தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
அதிமுக ஒன்றியச் செயலாளராக திரு.டி.சிவசாமி நியமனம்!

அதிமுக ஒன்றியச் செயலாளராக திரு.டி.சிவசாமி நியமனம்!

Admin 06 Jul 2026 | 02:03 PM
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) கோவை புறநகர் மத்திய மாவட்டம், மதுக்கரை ஒன்றியச் செயலாளராக வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளரும், அக்கட்சியின் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளருமான திரு. டி. சிவசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மாசேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த டி. சிவசாமி, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளராகவும், அதிமுகவில் கோவை புறநகர் மத்திய மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கட்சிப் பணியில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அவரது சேவையைப் பாராட்டி, கோவை புறநகர் மத்திய மாவட்டம் மதுக்கரை ஒன்றியச் செயலாளராக அவரை அதிமுக பொதுச்செயலாளர் நியமித்துள்ளார்.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, டி. சிவசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

குறிச்சொற்கள்

அரசியல் தமிழ்நாடு D.Sivasamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண