தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து மழலை காரிகா சாதனை! • அதிமுக ஒன்றியச் செயலாளராக திரு.டி.சிவசாமி நியமனம்! • வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ • திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்! • ஆளும்கட்சியான தவெக மீது எழும் குதிரை பேரம் குற்றச்சாட்டு - காசிராஜன் கடும் விமர்சனம். • இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து மழலை காரிகா சாதனை! • அதிமுக ஒன்றியச் செயலாளராக திரு.டி.சிவசாமி நியமனம்! • வியட்நாம் கடலில் உயிரிழந்த கம்பளத்தார்; உடலை மீட்க உதவிய துரைவைகோ • திருட வந்ததை மறந்து புத்தகத்தில் மூழ்கிய திருடன்! • ஆளும்கட்சியான தவெக மீது எழும் குதிரை பேரம் குற்றச்சாட்டு - காசிராஜன் கடும் விமர்சனம்.
விளம்பரங்கள்
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து மழலை காரிகா சாதனை!

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து மழலை காரிகா சாதனை!

Admin 06 Jul 2026 | 08:23 PM
பகிர்:

அறிவியல் உலகின் அடிப்படையாகக் கருதப்படும் தனிம வரிசை அட்டவணை (Periodic Table)-யில் இடம்பெற்றுள்ள 118 வேதியியல் தனிமங்களின் பெயர்களையும் வெறும் 43.25 நொடிகளில் துல்லியமாக ஒப்புவித்து, யூகேஜி வகுப்பில் படித்து வரும் நான்கு வயது மழலை தி.காரிகா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தி.காரிகா, சேவாக்கவுண்டன்புதூரில் அமைந்துள்ள Optimus Public School-இல் யூகேஜி படித்து வருகிறார். மருத்துவர் வி. தினேஷ்குமார் - திருமதி தி.நந்தினி தம்பதியினரின் மகளான தாரிகா பாட்டனார் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளர்களில் ஒருவராவரான திரு. வெங்கடாச்சலம் அவர்களின் பெயர்த்தி ஆவார்.

டெல்லியில் உள்ள பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மருத்துவர் வெ. தினேஷ்குமாரின் மகளான தி.காரிகா, கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, தனது அபார நினைவாற்றலாலும் அறிவியல் மீதான ஆர்வத்தாலும் இந்தச் சாதனையை நிகழ்த்தி Indian Book of Records-இல் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.

இளம் வயதிலேயே இத்தகைய அரிய சாதனையை நிகழ்த்தியுள்ள காரிகாவிற்கு கல்வியாளர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்தால், அவர்கள் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதற்கு காரிகாவின் இந்த வெற்றி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தனிம வரிசை அட்டவணை என்றால் என்ன?

தனிம வரிசை அட்டவணை (Periodic Table) என்பது உலகில் அறியப்பட்ட 118 வேதியியல் தனிமங்களை, அவற்றின் அணு எண் (Atomic Number) அடிப்படையில் அறிவியல் முறையில் வரிசைப்படுத்திய அட்டவணையாகும்.

1869-ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியலாளர் டிமிட்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev) முதன்முதலில் தனிமங்களை ஒழுங்குபடுத்திய அட்டவணையை உருவாக்கினார். பின்னர், அணு எண்ணை அடிப்படையாகக் கொண்ட நவீன தனிம வரிசை அட்டவணை உருவாக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அட்டவணையில் மொத்தம் 7 காலங்களும் (Periods), 18 தொகுதிகளும் (Groups) உள்ளன. ஒரே தொகுதியில் இடம்பெறும் தனிமங்கள் ஒத்த வேதியியல் பண்புகளைக் கொண்டிருக்கும். உலோகங்கள், அலோகங்கள் மற்றும் அரை உலோகங்கள் என தனிமங்கள் பல்வேறு வகைகளாக இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹைட்ரஜன் முதல் ஓகனெசான் (Oganesson) வரை உள்ள 118 தனிமங்களின் பெயர்களை வரிசையாக நினைவில் வைத்திருப்பது பெரியவர்களுக்கே சவாலான ஒன்றாக இருக்கும் நிலையில், நான்கு வயது மழலை காரிகா அவற்றை வெறும் 43.25 நொடிகளில் துல்லியமாக ஒப்புவித்திருப்பது அவரது அசாதாரண நினைவாற்றல், பயிற்சி மற்றும் ஒருமுகக் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் சாதனை

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் கவனத்தை பயனுள்ள அறிவியல் கற்றலின் பக்கம் திருப்ப வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழலில், காரிகாவின் இந்தச் சாதனை மற்ற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.

குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தை ஊக்குவித்து, விளையாட்டுத்தனமான கற்றல் முறைகள் மூலம் அறிவியலை அறிமுகப்படுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் உலகளாவிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை காரிகா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

43.25 நொடிகளில் 118 வேதியியல் தனிமங்களின் பெயர்களை ஒப்புவித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ள மழலை காரிகாவிற்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் பல தேசிய மற்றும் உலகளாவிய சாதனைகளைப் படைத்து, தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க காரிகாவிற்கு வாழ்த்துகள்!

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு Kaarikaa thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண