தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #02 – தெனாலி ராமன் கண்டுபிடித்த புத்திசாலித்தனமான தீர்வு! • அரசனுக்கே அறம் சொல்லத் தயங்காத விதுரர்! – விதுர நீதி சொல்லும் வாழ்க்கைப் பாடம் • பெனிசிலின்: ஒரு தவறிலிருந்து பிறந்த உயிர்காக்கும் மருந்து! • அடிமைத்தனத்தின் முதல் தடங்கள் - மனிதன் மனிதனை அடிமையாக்கத் தொடங்கியது எப்போது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #02 – தெனாலி ராமன் கண்டுபிடித்த புத்திசாலித்தனமான தீர்வு! • அரசனுக்கே அறம் சொல்லத் தயங்காத விதுரர்! – விதுர நீதி சொல்லும் வாழ்க்கைப் பாடம் • பெனிசிலின்: ஒரு தவறிலிருந்து பிறந்த உயிர்காக்கும் மருந்து! • அடிமைத்தனத்தின் முதல் தடங்கள் - மனிதன் மனிதனை அடிமையாக்கத் தொடங்கியது எப்போது?
விளம்பரங்கள்
தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்

தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்

Admin 31 Aug 2026 | 05:00 PM
பகிர்:

பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இளம் தொழில் முனைவர் ஆர். பிரவின்குமார் இடம்பெற்ற அணி இரண்டாம் இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளது. விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் பிரவின்குமாரின் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் RKG பேட்மிட்டன் அகாடமி சார்பில் மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கான ஆட்டங்கள் 30.08.2026 அன்று நடைபெற்றன.

இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் பொள்ளாச்சியைச் சேர்ந்த VNR அக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். பிரவின்குமார் பங்கேற்ற அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியை எட்டியது. இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து பதக்கத்தை வென்றது.

இளம் தொழில் முனைவராக மட்டுமின்றி, சிறந்த விளையாட்டு ஆர்வலராகவும் திகழ்ந்து வரும் பிரவின்குமார், தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இருந்தே பேட்மிட்டன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கல்வியிலும் சிறந்து விளங்கிய இவர், கோவை PSG கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டமும், சென்னை லயோலா கல்லூரியில் சர்வதேச வணிகம் (International Business) பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

கல்வியைத் தொடர்ந்து தொழில் துறையில் தடம் பதித்துள்ள பிரவின்குமார், தற்போது பொள்ளாச்சியில் VNR அக்ரோ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொழில் சார்ந்த பணிகளுக்கு இடையிலும் தனது விளையாட்டு ஆர்வத்தைத் தொடர்ந்து வருவதுடன், பேட்மிட்டன் போட்டிகளில் அவ்வப்போது பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

பள்ளி, கல்லூரி அளவிலான போட்டிகளில் தொடங்கிய இவரது விளையாட்டுப் பயணம், மாவட்டம், மாநிலம் என விரிவடைந்து தற்போது தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதுவரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்று, பலமுறை பரிசுகளையும் பெற்றுள்ளார்.

தொழில் துறையில் தனது பொறுப்புகளை கவனித்துக் கொண்டே விளையாட்டுத் துறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரவின்குமாரின் இந்த மாநில அளவிலான வெற்றி, அவரது தொடர் முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்துள்ள மற்றுமொரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

மாநில அளவிலான போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ள ஆர். பிரவின்குமாருக்கு நண்பர்கள், உறவினர்கள், தொழில் துறையினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு ஆர்.பிரவின்குமார் பொள்ளாச்சி பேட்மிட்டன் RKG பேட்மிட்டன் அகாடமி VNR அக்ரோ பொள்ளாச்சி செய்திகள் கோவை செய்திகள் விளையாட்டு செய்திகள் தமிழ்நாடு பேட்மிட்டன் Badminton Pollachi Sports Achievement
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண