தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
சென்னையில் சமூகநீதி கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

சென்னையில் சமூகநீதி கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

Radheyan 20 Jul 2021 | 04:07 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து உருவாக்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை 11.00 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.  

இக்கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய  அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.ரத்தினசபாபதி தலைமையில் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றன. இவர் தலைமையில் செயல்படும் SFBC அமைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகமே (வன்னியர்) தொடர்ந்து கோலேச்சுவதையும், மோசடிகளில் ஈடுபடுவதையும் எதிர்த்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவரும்,  சீர்மரபினர் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான திரு.கொ.நாகராஜன்,  இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,  சீர்மரபினர் நலச்சங்கத்தின் செயல்தலைவருமான திரு.பெ.இராமராஜ், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளரும்,  சீர்மரபினர் நலச்சங்கத்தின் இணைச்செயலாளருமான திரு.சு.இராமராஜ்,  வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்  மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தர்ராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண