தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாயங்களுக்கு தொடரும் அநீதி! மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாயங்களுக்கு தொடரும் அநீதி! மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு!

Radheyan 15 Apr 2021 | 04:28 PM
பகிர்:

நீதிமன்றங்கள் தடைவிதிக்கவில்லை என்றாலும் MBC உள்ஒதுக்கீடு சட்டம் 8/2021-ஐசெயல்படுத்த முடியாது.

உயர்கல்வித்துறையின் கடித எண் 4903 நாள்1.4.2021, 115 சமூகங்களுக்கு மேலும் ஒரு அநீதி.

1. தமிழகத்தின் சட்டம் 45/1994 SC/ST/BC/MBC என்று எல்லா பிரிவுகளுக்கும் 69% இடஒதுக்கீடு வழங்குகிறது என்பதும் அதில் 116 சமூகங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) என்று 20% இடஒதுக்கீடு வழங்குகிறது என்பதும், அந்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 31Bயின் படி 9-ஆவது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த சரத்து 31ஆ என்ன சொல்கிறது என்றால் எந்த நீதிமன்றத்தில் என்ன தீர்ப்புக்கள் கூறினாலும் 9-ஆவது அட்டவணையில் உள்ள சட்டங்களை திருத்தும்வரை/நீக்கும்வரை அச்சட்டம்தான் செயல்பாட்டில் இருக்கும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அப்படியிருக்கும்போது அச்சட்டத்தை திருத்தாமல் MBC 20% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு மட்டும் 10.5% என்று வழங்க முடியாது. ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் 45/1994-ன்படி 116 சமூகங்களுக்கு 20% வழங்கப்படுமா? அல்லது எடப்பாடி.பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் 8/2021-இன் படி ஒரு சமூகத்திற்கு 10.5 சதவீதமும், 93 சமூகங்களுக்கு 7 சதவீதமும், 21 சமூகங்களுக்கு 2.5 சதவீதமும் வழங்கப்படுமா? என்றால், அரசியல் அமைப்பு சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போட்ட சட்டமே செல்லும், மக்கள்விரோத எடப்பாடி அதிமுக அவசர அவசரமாக அதிகார இச்சைக்காக 115 சமூகங்களுக்கு துரோகம் செய்த சட்டத்தை செயல்படுத்த முடியாது. அப்படியிருக்கும் போது 115 சமூகங்களை மேலும் முட்டாளாக்கும் வகையில் தேர்தல் காலத்தில் முட்டாள் தினத்தன்று 1.4.2021 உயர்கல்விதுறை கடித எண் 4903மூலம் சட்டம் 8/2021யை செய்லபடுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதனால் 115 சமூகங்களின் வாய்ப்புக்கள் உடனடியாக பறிபோகிவிட்டது.


2. வன்னியர்களுக்கு 10.5% வழங்கியது நியாயம்தான் என்று பேசுவது பொய்யானது அநீதியானது ஏனென்றால் அச்சமூகம் பெரும் சமூகம் என்பது சதி திட்டத்தால் இட்டுக்கட்டப்பட்ட பொய் பிம்பம். அம்பாசங்கர் ஆணையத்தின் 21 உறுப்பினர்களில் 14 பேர், இவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கீடு 100% பிழையானது என்று அறிக்கை சமர்பித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் அச்சமூகம் 8%ம் என்றே குறிப்பிடுகிறது, அதுவும் பிழையானதே. உண்மையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும். 1920களில் அப்படி ஒரு சமூகம் பதிவு செய்யப்படவில்லை. கள்ளர்களில் வன்னியர் பட்டம் கொண்ட மக்களையும், கவுண்டர் பட்டம் கொண்ட ஊராளி கவுண்டர், வேட்டுவ கவுண்டர் மக்களையும், வேட்டைக்கார நாயக்கர், தொட்டிய நாயக்கர் மக்களையும் வன்னியர், வன்னியர் கவுண்டர், வன்னிய நாயக்கர் என்று ஒரு சமூக மோசடியில் உருவாக்கப்பட்டதுதான் வரிசை எண் 216ல் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சாதி. 100% அச்சமூகம் பெரும் சமூகமாக இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அவர்களுக்கு 10.5%ம் என்பது அநீதியானது. அம்பாசங்கர் அறிக்கையை ஆதாரமாக பொதுவெளியில் பேசுவது விபரம் அறியாதவர்களை கட்டுக்கதைக்கு இரையாக்குவது.

3. வன்னியர்கள் அரசுவேலைகளின் 1 இலட்சம்பேரும், நிறுவனங்களில் 1 இலட்சம் பேரும் இருப்பதாக "சுக்கா மிளகா சமூகநீதி" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது. அதாவது மொத்த மாநில அரசு வேலை மற்றும் நிறுவன வேலைகளில் தலா 10 இலட்சத்தில் 10% வன்னியர்கள் இருப்பதை மருத்துவர் தெளிவாக பதிவு செய்துள்ளார். 78% பிற்படுத்தப்பட்டோருக்கு 50% தான் இடஒதுக்கிடு வழங்கப்படுகிறது. 8% இருக்கும் சமூகத்திற்கு 10.5% எப்படி வழங்க முடியும்? 10% மேல் இருக்கும் 68 DNT மக்களை மிக குறைவாக காட்டுவதை எத்தனைகாலம் ஏற்றுக்கொள்ள முடியும். இம்முறை இதற்கு விடிவு பிறந்தே ஆகவேண்டும்.

4. வன்னியர்கள் பின்தங்கியுள்ளனர், அதனால் அவர்களுக்கு இது அவசியம். ஒரு சமூகத்தை மட்டும் தனி வகுப்பாக நடத்தலாம். எல்லாம் பொய். அதே அம்பாசங்கர் அறிக்கையில் வன்னியர்கள் சமூக கல்வி அளவுகளில் 15 புள்ளிகள் பெற்று பின்தங்கியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று கள்ளர், மறவர், வலையர், முத்தரையர் உள்ளிட்ட பல சமூகங்கள் 15 புள்ளிகளே பெற்றுள்ளனர். எனவே ஒரே அளவுகோளில் இருக்கும் சமூகங்களை வேறு வேறு பிரிவுகளில் வைக்க முடியாது.

5. அவர்களின் 40 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியா இந்த உள்ஒதுக்கீடு என்றால், இல்லை,இல்லை, ஒரு தனி நபரின் அதிகார இச்சைக்காக 40 நிமிடத்தில் நடத்தப்பட்ட கபட நாடகம், சமூகநீதி கொள்ளை. மற்ற மக்கள் பிரதிநிதிகள் அடிமைகளாக இருந்து மற்ற சமூகத்திற்கு துரோகம் செய்து கழுத்தை அறுத்துவிட்டனர். சட்ட மன்ற விதிகளின் படி 5 நாட்களுக்கு முன்பே அனைத்து உறுப்பினர்களும் வரைவு மசோதா வழங்கியிருக்க வேண்டும். யாருக்கும் எப்போதும் வரைவு மசோதாவை வழங்காமல் மூன்று சீட்டு/திரிக்குத்து வேலையை போல் இயந்திரத்தனமான/வில்லத்தனமான சிரிப்போடு துறைக்கு சம்பந்தமில்லா அமைச்சர் சட்டத்தை கொண்டு வந்தார். எதிர்கட்சி மொத்த கூட்டத்தொடரையும் புறக்கணித்துள்ளது என்பதை தெரிந்தும் எந்த விவாதத்திற்கும் வாய்ப்பே இல்லாமல் பல சட்டமன்ற மரபுகளையும் விதிகளையும் படுகொலை செய்துவிட்டு மிக மோசமான சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இங்கு கேள்வி கேட்க ஆள் இல்லை. எல்லாம் வாக்கு அரசியல். வன்னியர் வாக்கு கிடைக்காது என்ற எண்ணம். இங்கு நீதிக்காக சட்டத்திற்காக குரல் கொடுக்க ஒரு கட்சியும் இல்லை என்பது மட்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் நீதிவழங்க தவறிவிட்டதா?

6. சட்டமன்றம் சட்டமியற்றினால் சரியாகத்தான் இருக்கும் என்ற குருட்டுத்தனமான வறட்டு கோட்பாட்டால் சட்டம் 8/2021க்கு தடைவிதிக்கவில்லை. ஆனால் ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு 1990லும் 2006லும் உடனடியாக தடைவிதித்த நீதிமன்றம், இப்போது மறுப்பது இந்நாட்டில் இரட்டை நீதி என்பதை நிரூபித்துள்ளது. கீழ்கண்ட எந்த சட்ட கூறுகளையும் பார்க்க தவறிவிட்டது.

7. 2018ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 102க்கு பிறகு சரத்து 342Aன்படி ஜனாதிபதி ஆளுனரை ஆலோசித்துவிட்டு ஒரு மாநிலத்தில் யார் யார் எந்த எந்த பிற்பட்ட பிரிவில் வருவார்கள் என்று அறிவிப்பார் என்று சட்டமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் 26.2.2021 அன்று சட்ட எண் 8/2021க்கு ஒப்புதல் அளித்தது அதிகாரமற்ற செயல். மேலும் இதேபோன்ற மராத்தியர் இடஒதுக்கீடு சட்டம் 2018யை உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண் 3123/2020ல் 9.9.2020 அன்று மஹாராஸ்டிரா சட்டமன்றத்திற்கு இதுபோன்ற சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்றும் இந்த பிரச்சனையை அரசியல் அமைப்பு சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் அதுவரை அச்சட்டத்தை செயல்படுத்த தடைவிதித்துள்ளது. (குறிப்பு: தமிழக அரசு இதை அறியாமல் செய்துவிட்டது என்று நினைத்துவிடவேண்டாம் ஏனென்றால் உச்ச நீதிமன்றத்தில் 2012முதல் நிலுவையில் உள்ள தமிழக இடஒதுக்கீட்டு வழக்கில் சிலர் தமிழக வழக்கையும் மேற்படி மஹாராஸ்டிரா வழக்கோடு சேர்க்க வேண்டும் என்று 2020' 12வது மாதத்திலேயே வழக்கு தொடுத்து அது நிலுவையில் இருக்கும் போதுதான், நீதிமன்றங்களையும் மக்களையும் தூசியாக மதித்துத்தான் உலக ஜனநாயக வரலாற்றில் எங்குமில்லாத அளவில் மின்னல் வேகத்தில் (சிலநிமிடங்களில்) எல்லா சட்ட மரபுகளையும் படுகொலைசெய்துவிட்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது).

8. மேற்படி 102வது திருத்தப்படி சரத்து 338Bன்படி (உட்பிரிவு 7) தமிழக பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாடு சம்பந்தமாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். எனவே தமிழக அரசு தமிழக ஆணையத்தின் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் 8/2021 கொண்டுவரப்பட்டுள்ளது என்பது அதிகாரமற்ற செயல்.

9. 1994ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 76ன் மூலம் தமிழக இடஒதுக்கீடு சட்டம் 45/1994 இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 9வது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரிவு 4, 5ன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு(MBC) 20% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அச்சட்டத்தை திருத்தாமல் MBC இடஒதுக்கீட்டை 10.5%, 7%, 2.5% என்று கூறுபோட சட்டத்தில் வாய்ப்பே இல்லை. சட்டம் 45/1994தான் செல்லும், சட்டம் 8/2021 செல்லாது. சட்டம் 45/1994யை திருத்தினால் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்க முடியும். (குறிப்பு தமிழக அரசு இப்போதுதான் இப்படி செய்கின்றது என்று நினைக்கவேண்டாம். 2007ல் 30% BC இடஒதுக்கீட்டிலும், 2009ல் 18% SC இடஒதுக்கீட்டிலும் இதுபோன்று சட்டவிரோதம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மக்களும் நீதிமன்றங்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்).

10. அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 16(4)ன்படி வகுப்பு வாரி இடஒதுக்கீடு மட்டுமே சாத்தியம். சாதிவாரி இடஒதுக்கீடு செல்லாது. 1921 முதல் தமிழகத்தில் இருந்த சாதிவாரி இடஒதுக்கீட்டை 1951ல் செண்பகம் துரைராஜன் வழக்கில் செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறி 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாதிவாரி இடஒதுக்கீடு கொண்டுவருவது சட்டப்படி செல்லாது. நாட்டை நாசமாக்கும் செயல்.

11. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அறிக்கையின் அடிப்படையில் சட்டம் 8/2021 கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் ஆணையம் 7.10.2020 மற்றும் 21.1.2021 தேதிகளில் கூடியபோது எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் இந்திரா ஷஹானி வழக்கில் பத்தி 123ல் ஆணையத்தின் பரிந்துரையைத்தான் அரசு ஏற்கவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. எனவே எந்த சமூகத்தையும் கலந்து ஆலோசிக்காமல் தலைவர் பரிந்துரை செய்யவும் முடியயாது, அதை ஏற்று அரசு சடம் இயற்றவும் முடியாது. எனவே எல்லா சட்ட மரபுகளையும் மீறி 115 சமூக மக்களின் உரிமைகளை பறித்தது அநாகரிகத்தின் உச்சம்.

நமக்கெதிரான அநீதியை வேறறுக்க நீதிமன்றங்களின் கதவுகளை தட்டுவது மட்டும் தீர்வாகாது. அது சட்டம் நமக்கு வழங்கியுள்ள ஒரு வாய்ப்பு அவ்வளவே. ஆனால் வாக்குவங்கி ஜனநாயக நாட்டில் சமுதாய மக்களின் நலனுக்காகவே இயங்குவதாக சொல்லும் சமுதாய அமைப்புகள், தங்கள் சமுதாய மக்களை ஒன்றுதிரட்டி பிற 115 சமுதாய மக்களுடன் தெருவில் இறங்கி போராடுவதே வெற்றியைத்தரத்தக்கவல்லது.

கட்டுரையாளர்:

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர்,       தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68-சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 115 சமூக அமைப்புக்கள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண