தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இராஜகம்பளத்தார் ஆர்வமுடன் விருப்பமனு!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இராஜகம்பளத்தார் ஆர்வமுடன் விருப்பமனு!

Radheyan 20 Dec 2025 | 03:53 PM
பகிர்:

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விருப்பமனு பெறத்தொடங்கியுள்ளன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் இராஜக்மபள சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் விருப்பமனு அளித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,


அதிமுக சார்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு கடந்த 15 ஆம் தேதி முதல் விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதல்நாளே 1200-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருந்தனர். இந்நிலையில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் அக்கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள இராயப்பேட்டையில் விருப்பமனு பெறுவதற்கான கூட்டம் அலைமோதிவருகிறது. இதன்காரணமாக அப்பகுதி சாலைகளெங்கும் அதிமுக கொடிகட்டிய கார்கள் ஆக்கிரமித்துள்ளது. தங்கும் விடுதளெல்லாம் ஹவுஸ் புல் போர்டு தொங்குவதால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் நீண்ட தொலைவில் அறையெடுத்துத் தங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இதற்கிடையே கடந்த புதன்கிழமை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக செட்டுகுறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அக்கட்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளருமான திரு.அ.காசிராஜன் விருப்பமனு அளித்திருந்தார். இதனையடுத்து நேற்று (வியாழக்கிழமை) விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிடுவதற்காக புதூர் ஒன்றியச் செயலாளரும், முன்னாள் சேர்மனுமான திரு.தனஞ்செயன் அவர்களும், அரவக்குறுச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஒன்றியச் செயலாளர் திரு.கோ.கலையரசன் அவர்களும், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடுவதற்காக மதுக்கரை ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் திரு,டி.சிவசாமி அவர்களும் விருப்பமனு அளித்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kasirajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண