தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
அதிமுக மாவட்ட துணைச்செயலாளராக எம்டிஎஸ்.பாண்டியன் நியமனம்!

அதிமுக மாவட்ட துணைச்செயலாளராக எம்டிஎஸ்.பாண்டியன் நியமனம்!

Radheyan 13 Nov 2025 | 08:44 PM
பகிர்:

அதிமுக மாவட்ட துணைச்செயலாளராக எம்டிஎஸ்.பாண்டியன் நியமனம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளராக சென்னை மீஞ்சூரைச் சேர்ந்த திரு.எம்டிஎஸ்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான திரு.எடப்பாடி க.பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,

தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்னும் நான்கைந்து மாதங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. முக்கியப் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கட்சி அமைப்புகளில் பல்வேறு மாறுதல்கள் செய்து. புதிய நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இக்கட்சிகள் பூத் லெவல் கமிட்டிகள் நியமித்துள்ளதால், தற்போது நடைபெற்று வரும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் அக்கட்சியினர் பூத் லெவெல் ஆபீசர்களுடன் இணைந்து வீடு, வீடாகச்சென்று எந்த வாக்காளர் பெயரும் விடுபட்டுவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்தலை ஒட்டி பிரச்சாரக் கூட்டங்கள், பத்திரிக்கை விளம்பரம் தவித்து சமூக வலைதளங்கள், திண்ணைப் பிரச்சாரம், டாக் ஷோக்கள் என அனைத்து வகைகளிலும் கட்சி வேட்பாளர் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை  ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஏதுவாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, அதிமுகவில் தற்போது இலக்கிய அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளராக மீஞ்சூரைச் சேர்ந்த எம்.டி.எஸ். பாண்டியன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் மாங்கரை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாண்டியன் அவர்கள் மீஞ்சூர் நகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்க உறுப்பினரான திரு.பாண்டியன் இலக்கிய அணி மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.    

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு MDS.Pandian thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண