Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று வனக்காவலரானார் தங்கப்பாண்டி!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று வனக்காவலரானார் தங்கப்பாண்டி!

Radheyan 15 Jul 2025 | 04:50 PM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்று வனக்காவலராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார் கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த பி.தங்கப்பாண்டி. இதன் விவரம் பின்வருமாறு,

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கீழமுடி மன்னார் கோட்டை அருகேயுள்ள தோப்புநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கே.பூமிராஜ் - தெய்வத்திருமதி.சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் பி.தங்கப்பாண்டி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்தாண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.


எம்.எஸ்சி, பிடி பட்டாதாரியான பி.தங்கப்பாண்டி கல்லூரிப்படிப்பு முடித்து தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஐந்தாண்டுகளாக பணியாற்றிக்கொண்டே அரசுப்பணிக்கான தேர்வுக்குத் தயாராகிக்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்ற பி.தங்கப்பாண்டிக்கு கடந்த ஜூன் 11-ஆம் தேதி வனக்காவலர் பதவிக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வனக்காவலாராக தங்கப்பாண்டி பொறுப்பேற்றுக்கொண்டு பணியாற்றத் தொடங்கியுள்ளார்.

ஒருசில தோல்விகளைக்கண்டு சோர்ந்துவிடாமல் கடைமையாக முயன்று வெற்றிக்கோட்டை எட்டியுள்ள பி.தங்கப்பாண்டிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு thangapandi thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண