தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
பாஜக மாவட்டச் செயலாளராக ஆர்.பி. பூபதி நியமனம்!

பாஜக மாவட்டச் செயலாளராக ஆர்.பி. பூபதி நியமனம்!

Radheyan 26 May 2025 | 03:54 PM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பேக்கரி & ஹோட்டல் உரிமையாளர் ஆர்.பி.பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விபரம் வருமாறு,

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்தவர் ஆர்.பி.பூபதி. இவர் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதன்சந்தையில் R.B. பூபதி ஸ்னேக்ஸ் & பேக்கரி கம் ஹோட்டல் நடத்திவருகிறார் .

சிறுவயது முதலே வியாபாரம் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் பூபதி அவர்கள் 2021-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவராகப் பணியாற்றி வருகிறார.

இந்நிலையில் பாஜக வின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அக்கட்சியின் சட்டமன்றக்கட்சித் தலைவராக இருந்துவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கட்சி அமைப்புகளில் பல்வேற் மாற்றங்ஙளை செய்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அக்கட்சி முழுவீச்சில் தயாராகி வருகிறது.

இதனொரு பகுதியாக மாவட்ட அளவில் செய்யப்பட்டு வரும்  மாற்றங்களின்படி நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஆர்.பி.பூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி அரசியலைத் தாண்டி  சமுதாய அமைப்புகளுடனும், சமுதாய உறவுகளுடனும் நல்லிணக்கத்தோடும், தோழமையோடும் இருந்துவரும் பூபதி அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முக்கிய நன்கொடையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூபதி அவர்களை மாவட்டச் செயலாளராக நியமித்ததின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்துவரும் இராஜகம்பள சமுதாய மக்களின் கவனத்தை அக்கட்சி ஈர்த்துள்ளது. இது அக்கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆர்.பி.பூபதி அவர்களை மாவட்டச் செயலாளராக நியமனம் செய்த மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் அவர்களுக்கும், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Boopathy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண