Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய மஹாராவின் மாண்பு!

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய மஹாராவின் மாண்பு!

Radheyan 19 May 2025 | 04:20 PM
பகிர்:

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் போலந்து நாட்டினை கைப்பற்றச் சென்றபோது, போலந்து நாட்டைச் சேர்ந்த 500 பெண்களையும், 200 குழந்தைகளையும் ஒரு ராணுவக் கப்பலில் ஏற்றி அவர்களை ஏதாவது ஒரு நாட்டில் பாதுகாப்பாக இறக்கி விடுமாறு கப்பல் கேப்டனிடம் போலந்து ராணுவம் கூறியது. 

அவர்களுக்கு விடை கொடுத்த ராணுவத்தினர், "நாம் உயிர் பிழைத்திருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்று கூறி விடையளித்தனர். கப்பல் அவர்களை ஏற்றிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஸீஷைல்ஸ் ஏதென்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்றது. எந்த நாடும் அவர்களை அனுமதிக்கவில்லை. நீண்ட பயணத்திற்குப் பிறகு கப்பல் அப்படியே ஈரான் பக்கம் வந்தது. அங்கேயும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

கடைசியாக, கப்பல் மும்பைக்கு வந்தது சேர்ந்தது. அப்போது இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷார் போலந்து நாட்டு மக்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள ஜாம்நகர் மஹாராஜா "ஜாம் ஸாஹேப் திக்விஜய் சிங்ஜி ரஞ்ஜித்சிங்ஜி ஜடேஜா" மிகுந்த இரக்கம் கொண்டு அந்த கப்பலை தனது ஆட்சிக்குட்பட்ட ஒரு துறைமுகத்தில் நிறுத்த அனுமதியளித்தார். அது மட்டுமல்லாமல் அவர்களை உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்வித்து ஜாம்நகரில் தங்க வைத்தார். தவிர, குழந்தைகளுக்கு பாலச்சாடி என்ற ஊரில் இருந்த ராணுவப் பள்ளியில் இலவச கல்விக்கும் ஏற்பாடு செய்தார். அவர்களை அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தார். மஹாராஜாவை அவர்கள் அன்புடன் "பாபு" என்றழைத்தனர். அவர்கள் உலகப் போர் முடியும் வரை சுமார் ஒன்பது வருடங்கள் அவருடைய பராமரிப்பிலிருந்தார்கள். போர் முடிந்தவுடன் தங்கள் நாட்டிற்குத திரும்பிச் சென்றனர். 

அந்த குழந்தைகளில் ஒன்று வளர்ந்தவுடன் பிற்காலத்தில் போலந்து நாட்டின் பிரதமராகியது. போலந்து தலைநகர் வார்ஸாவின் பல தெருக்களுக்கு 'மஹராஜா ஜாம் திக் விஜய் சிங்' பெயரை வைத்து மகிழ்ந்தனர். பல நலத்திட்டங்களுக்கும் அவரது பெயரை வைத்தனர். இன்றும் அந்த அகதிகளின் வாரிசுகள் வருடத்திற்கு ஒரு முறை ஜாம்நகருக்கு வருகை தந்து அவர்களின் முன்னோர்களை நினைவு கூர்ந்து செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அங்குள்ள பத்திரிகைகள் மஹாராஜாவைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. அந்த காலத்திலேயே இதன் மூலம் நமது கலாச்சாரம் "விருந்தோம்பல், தர்மசிந்தனை மற்றும் பொறுமையணர்வு" ஆகிய மாண்புகளை உள்ளடக்கியது என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறோம்.

2011 ஆம் ஆண்டில், ஜடேஜாவுக்கு மரணத்திற்குப் பின் போலந்து ஜனாதிபதியால் கமாண்டர்ஸ் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மெரிட் வழங்கப்பட்டது , மேலும் வார்சாவில் உள்ள குட் மகாராஜா சதுக்கத்தில் கௌரவிக்கப்பட்டார்..

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Digvijaysinhji Ranjitsinhji Jadeja thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண