Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
இ-மெயில் பயன்படுத்துபவாரா? அப்படியானால் இவரைத் தெரியுமா?

இ-மெயில் பயன்படுத்துபவாரா? அப்படியானால் இவரைத் தெரியுமா?

Radheyan 02 Dec 2024 | 05:30 PM
பகிர்:

மின்னஞ்சல் (Email) கண்டறிந்த சிவா அய்யாத்துரை பிறந்த தினம் இன்று (1963).

சிவா அய்யாதுரை இந்தியாவில் உள்ள பம்பாயில் இந்து தமிழ் குடும்பத்தில் 2 டிசம்பர் 1963 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் குடும்பத்தோடு அமெரிக்கா சென்றார். அங்கு அவர் சிறந்த மாணவராக திகழ்ந்தார்.

நியுயார்க் பல்கலைகழகத்தின் இன்ஸ்ட்யூட் ஆஃப் மேத்தமெட்டிக்கல் சயின்ஸ் ஆப் நியூயார்க் என்ற கோடைக்கால பயிற்சியில் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் எனப்படும் நிரலாக்கத்தை பயின்றார். நியூ ஜெர்சியிலுள்ள லிவிங்ஸ்டன் உயர்நிலை பள்ளியில் படிக்கும்போதே யுனிவர்சிட்டி ஆப் மெடிசன் அண்ட் டென்சிட்டி (யு.எம்.டி.என்.ஜே) என்னும் பள்ளியில் தொண்டுகள் செய்து வந்தார். அங்குள்ள மேற்பார்வையாளர்களில் ஒருவரான டாக்டர் மெக்கல்.பி. மைக்கெல்சன் அவரது திறமைகளை நோக்கினார். டாக்டர் மெக்கல்.பி. மைக்கெல்சன் சிவாவுக்கு ஒரு சவாலை வைத்தார். அதாவது காகித கடித போக்குவரத்தை கணிணியில் செய்வது போன்ற ஒரு ப்ரோகிராமை உருவாக்க சொன்னார்.

14 வயதே ஆகியிருந்த சிவா, டிஜிட்டல் தகவல்களை உலகமெங்கும் அனுப்பவும், பெறவும் கூடிய ஒரு ப்ரோகிராமை உருவாக்குவது குறித்து கற்பனை செய்ய துவங்கினார். பிறகு அவர் பாதுகாப்பான மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான கணிணி அஞ்சல் முறையை உருவாக்கினார்.

அதை அவர் இமெயில் (மின்னஞ்சல்) என்று அழைத்தார். 1982ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இதற்கான காப்புரிமையை பெற்றார். அப்போது அவருக்கு 18 வயது.

மாசூசெட்ஸ் இன்ஸ்டட்யூட் ஆஃப் டெக்னாலிஜியில் (எம்.ஐ.டி) பொறியியல் மற்றும் கணிணி அறிவியலில் இவர் இளங்கலை பட்டத்தை பெற்றார். விஷிவல் ஸ்டடிஸ் மற்றும் மீடியா லேபரட்டரி ஆஃப் சயின்டிஃபிக் விஷ்வலிசேஷன் என்கிற படிப்பின் கீழ் முதுகலை பட்டம் பெற்றார். அதே எம்.ஐ.டி யில் மெக்கானிக்கல் என்ஜினியரிங்காக மற்றொரு முதுகலை பட்டமும் பெற்றார்.

 2007ஆம் ஆண்டு எம்.ஐ.டியில் கணிணி உயிரியலில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டு இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க மாணவர்களுக்கான ஃபுல்பிரைட் நிதியுதவியை பெற்றார்.

அடுத்த ஆண்டு முதல் அவர் பேராசிரியர், கண்டுப்பிடிப்பாளர் மற்றும் கணிணி விஞ்ஞானி ஆகிய மூன்று பணிகளில் இருந்தார். சிவா ஒரு மிகப்பெரும் அறிவாளியான பல்துறை நிபுணர் ஆவார். இவரது கண்டிப்பிடிப்புகள் எல்லாம் தொழில்நுட்பம், மருத்துவம், ஊடகம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவர் சில நிறுவனங்களையும் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளார். அமெரிக்க ஒயிட் ஹவுஸ் போட்டியான அஞ்சல்களை தானாகவே வரிசைப்படுத்தும் நிகழ்வில் இவர் வென்ற பிறகு எக்கோ மெயில் எனும் நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்களில் மார்க்கெட்டிங் செய்தல், கண்காணிப்பு மற்றும் மேலாண்மை பணிகளை செய்து கொடுக்கும் நிறுவனமாகும். 2000 நிறுவனங்களுக்கு மேல் இந்த நிறுவனம் மேலாண்மை (மேனஜ்மெண்ட்) செய்து வந்தது.

சிஸ்டம் ஹெல்த் ஆன்லைன் எஜிகேசன் என்னும் கல்விமுறையை நிறுவினார். பழைய மருத்துவ முறையான சித்த மருத்துவம் மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தை பற்றி அதில் கற்பிக்கப்பட்டது. நவீன மருத்துவத்திற்கும் பழைய மருத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை அவர் குறைக்க நினைத்தார்.

அருங்காட்சியகம், தேசிய வானொலி மற்றும் நேஷனல் புவியியல் சொசைட்டி போன்ற இலாப நோக்கமற்று இயங்கும் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்தார்.சாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி நிதி திரட்டி அனாதை சிறுமிகளின் கல்விக்கு உதவி செய்தார்.

1981ஆம் ஆண்டு அதிக பாதுகாப்பான மின்னஞ்சல் அமைப்பின் மென்பொருள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றிற்காக சிவா அய்யாதுரைக்கு “ஹானர்ஸ் குரூப் விருது” வழங்கப்பட்டுள்ளது. தமிழராய் பிறந்து தனது 14 வயதிலேயே உலகம் போற்றும் கண்டுபிடிப்பை கண்டுபிடித்த சிவா அய்யாதுரை தமிழருக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கியமானவர் ஆவார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Siva Ayyadurai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண