Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
மாவீரனின் 225-வது நினைவுநாள் - அஇஅதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாவீரனின் 225-வது நினைவுநாள் - அஇஅதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Radheyan 15 Oct 2024 | 05:01 PM
பகிர்:

விடுதலைக்காக தன் இன்னுயிர் துறந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 225-வது நினைவு நாளையொட்டி, நாளை (16.10.24) அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில், முன்னனித் தலைவர்கள் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் விவரம் வருமாறு,


இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பையும், தமிழர்களின் போர்க்குணத்தையும் பறைசாற்றும் வகையிலும், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவர் தூக்கிலடப்பட்ட அக்டோபர் 16 ஆம் தேதியன்று தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியும்,  1.50 கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்ட மிகப்பெரிய இயக்கமுமான அதிமுக சார்பில், அக்கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள் ஆண்டுதோறும் பங்கேற்கும் வகையில், நிலையாணை ஒன்றைப் பிறப்பிக்குமாறு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்களுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில், விருதுநகர் முன்னாள் நகரமன்றத் தலைவரும், அதிமுக-வின் முன்னனி தலைவர்களில் ஒருவருமான கே.கலாநிதி அவர்களின் வாயிலாக 2022-இல் கோரிக்கை வைக்கப்பட்டது.

இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் இக்கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி  அவர்கள் கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து, ஆண்டுதோறும் மாவீரனுக்கு தலைமைக்கழக சார்பில் சிறப்பு செய்ய நிலையாணை பிறப்பித்து உடனடியாக உத்தரவிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார். இதன் தொடர்ச்சியாக, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் ஆகிய இருதினங்களிலும், அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னனி தலைவர்கள் அடங்கிய குழுவினர் மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் தலைமைக்கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி.இராஜேந்திரபாலாஜி, எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், கழக அமைப்புச்செயலாளர் என்.சின்னத்துரை, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், மாவீரன் தூக்கிலிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி நேற்று (14.10.2024) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும், 40 லட்சம் கம்பளத்தார்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் நிலையாணை பிறப்பித்துள்ள ஒரே இயக்கம் அதிமுக என்பதும், கம்பளத்தாரின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு உத்தரவிட்ட ஒரே தலைவர் எடப்பாடியார் என்பதையும் கம்பளத்தார் சமுதாயம் என்றும் நன்றியுடன் நினைவு கூறும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Edappadi kattabomman thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண