Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி கோபிகா-வுக்கு கணிணி பரிசளிப்பு!

மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி கோபிகா-வுக்கு கணிணி பரிசளிப்பு!

Radheyan 30 Sep 2024 | 04:43 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரசூர் கிராமத்தைச் சேர்ந்த திருவாளர்கள் இராஜேந்திரன் - ஸ்ரீதேவி ஆகியோருடைய இளைய மகள் கோபிகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். இதனையடுத்து செல்வி கோபிகாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழை குவிந்தது.

செல்வி.கோபிகா மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கள் கிராமத்திற்கு பெருமை தேடித்தந்ததிற்காக அரசூர் கிராம மக்கள் கடந்த மே மாதம் (17.05.2024) பாராட்டு விழா நடத்தி சிறப்பித்தனர். சரண் பள்ளி தாளாளர் கே.என்.ஆர்.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், த.வீ.க.பண்பாட்டுக்கழக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் நீதிபதியுமான தங்கராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் பி.பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், மு.சரவணன், தொழிலதிபர் கண்ணுச்சாமி, பி.கே.பழனிச்சாமி, முருகேசன், பட்டக்காரர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோபிகா வுக்கு பாராட்டுச்சான்று, தங்க நாணயம், கேடயம் வழங்கி வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், செல்வி கோபிகா உயர்கல்வியிலும் மாநில அளவில் முதல் மதிப்பெண்பெற்று சாதனை படைக்கவும், அவர் விரும்பும் செயற்கை நுண்ணறிவுத்துறையில் (Artificial Intelligence) பட்டப்படிப்பிற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்து, அத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து கம்பளத்தாரின் வெற்றிக்கொடியை நிலைநாட்டி சமுதாயத்திற்கு புகழ் சேர்க்கவும் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கணிணி (கம்ப்யூட்டர்) வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.


நேற்று (29.09.2024) நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ் அவர்கள் கோபிகா-வுக்கு கணிணியை பரிசாக வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநிலக் காப்பாளர் முனுசாமி, மாநிலத் துணைச்செயலாளர் முத்துசாமி, சமுதாய தலைவர்கள் இராமசாமி, பட்டகார் சசி, மோகன்‌, சிவராஜ், ஏ.வி.எம்.முரளிதரன், தர்மராஜ் ஆகியோர்‌ கலந்துகொண்டு மாணவி கோபிகாவை பாராட்டினர். மேலும், கணிணியை வழங்கிய இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் உறுப்பினர் சிவசாமி அவர்களுக்கு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Gopika thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண