தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
இசை மகாசமுத்திரத்தின் 60-வது குருபூஜை விழா - சட்டமன்ற உறுப்பினர் நேரில் மரியாதை

இசை மகாசமுத்திரத்தின் 60-வது குருபூஜை விழா - சட்டமன்ற உறுப்பினர் நேரில் மரியாதை

Radheyan 26 Apr 2024 | 05:13 PM
பகிர்:

இசை மகாசமுத்திரம் என இசை மேதைகளாலும், அறிஞர்களாலும் போற்றப்படும் நல்லப்பசுவாமிகளின் 60-வது குருபூஜை விளாத்திகுளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்த விவரம் வருமாறு,


காடல்குடி பாலையக்காரர் வம்சாவளியைச் சேர்ந்தவரும், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருமான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் நெருங்கிய உறவினருமான விளாத்திக்குளம் சுவாமிகளுக்கு இளமையிலேயே இசையில் மிகுந்த ஆர்வம், திறமை இருந்தது. காவடிச்சிந்து, திருப்புகழைப்பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கரகரப்பிரியா ராகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பாடி இசை உலகின் கவனத்தை ஈர்த்தார். பாரதியார் நல்லப்பசுவாமிகளின் ராகத்திற்கு தீவிர ரசிகராக இருந்தார். ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், எஸ்.ஜி.கிட்டப்பா, மாரியப்பா, காருகுறிச்சி அருணாசலம், மதுரகவி பாஸ்கரதாஸ் போன்ற ஜாம்பவான்கள் இசைமகாசமுத்திரத்தின் தீவிர அபிமானிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இசைஉலகில் புகழ்பெற்ற நல்லப்பசுவாமிகளின் 60-வது குருபூஜை நேற்று அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் கலந்துகொண்டு சுவாமிகளின் நினைவுத்தூணுக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் விளாத்திக்குளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,  விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், வார்டு செயலாளர்கள் அய்யனார், ஸ்டாலின்கென்னடி, மாரிராஜ், சங்கரலிங்கம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், பேரூர் கழக வார்டு உறுப்பினர்கள் குறிஞ்சி, கலைச்செல்வி செண்பகராஜ், கழக உறுப்பினர் பசும்பொன் பழனிச்சாமி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சுவாமிகளுக்கு மரியாதை செலுத்த வந்த சட்டமன்ற உறுப்ப்பினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நல்லப்பசுவாமிகளின் வாரிசுதாரர் பால்ராஜ் வரவேற்றார்.

நன்றி: திரு.எம்.செல்வராஜ், 
ஒன்றியச்செயலாளர், 
புதூர் கிழக்கு ஒன்றிய திமுக.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Markkandeyan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண