தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
நீட், ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

நீட், ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

Radheyan 20 Jan 2024 | 01:39 AM
பகிர்:

நீட், ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவம் படிப்பதற்கான தகுதியை பெறுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும்  இந்திய விண்ணப்பதாரர்கள், மற்றவர்களைப் போலவே, தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் /பயோடெக்னாலஜி ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். NEET 2024 இல் கலந்து கொள்ள இந்திய விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

அதுபோல, நாட்டின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள் (IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிராதான இடத்தைப் பெற்றுள்ளன.  இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள் (IIIT), பிற மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B.Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது. மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐஐடி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இந்த நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE – Advanced) பங்கு பெற முடியும்.

இந்த நிலையில், நீட்  மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு கோச்சிங் கொடுக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு மத்தியஅரசு வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது. அதன்படி,

16 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை.

16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்தவர்களையே நீட் பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும்

மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.

குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை. 

விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு JEE NEET Coaching thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண