தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக திருநாவுக்கரசு நியமனம்!

தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக திருநாவுக்கரசு நியமனம்!

Radheyan 02 Sep 2023 | 05:02 PM
பகிர்:

திமுக வின் உட்கட்சித் தேர்தல்கள் கிளைக்கழகம் தொடங்கி தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு வரை முழுமையாக நடைபெற்று பொதுக்குழுவும் கூடி முடிந்துள்ளது. இதன் நீட்சியாக அக்கட்சியிலுள்ள பல்வேறு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பட்டியல் தலைமையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டு வருகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்  முழுவீச்சில் தயாராகி வருவம் நிலையில் துணை அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவதில் அக்கட்சி முனைப்புக்காட்டி வருகிறது. இதேவேகத்தில் மற்றொருபுறம் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் மண்டல வாரியாக நடைபெறத் தொடங்கியுள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று உரையாற்றி கட்சியினரை உற்சாகமூட்டி வருகிறார். 


பிரதான அமைப்பில் சொற்ப எண்ணிக்கையிலான ஒன்றிய, வட்ட செயலாளர் அளவிலான பதவிகளை மட்டுமே கம்பளத்தார் சமுதாயம் பெறமுடிந்த நிலையில்,  தற்போது வெளியிடப்பட்டு வரும் துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பட்டியலில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாவட்ட கலை, இலக்கிய அணி, இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட அமைப்புகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் கம்பளத்தார்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள விருதுநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக வழக்கறிஞர் S.திருநாவுக்கரசு B.A.,B.L.,M.L.M., (இவரைப்பற்றி முழுமையாக அறிய நீலநிற எழுத்தின்மீது விரல் வைக்கவும்) நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, தொழிலாளர் நலன் மற்றும் உரிமை சம்மந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகி எளிய மக்களின் குரலை விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களில் எதிரொலித்து வருகிறார். மேலும், துப்பாக்கி சுடுதலில் மாநில, தேசிய அளிவிலான போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்று பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார். தவிர, அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் திருநாவுக்கரசுக்கு அம்மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் வை.மலைராஜன், துணைத்தலைவர் சந்திரபாபு, திருச்சுழி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் மூக்கையா மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளராக பணியாற்றிட திருநாவுக்கரசு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thirunavukkarasu thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண