தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
மாநில இளைஞரணி துணைச்செயலாளராக மீண்டும் பூப்பாண்டி நியமனம்!

மாநில இளைஞரணி துணைச்செயலாளராக மீண்டும் பூப்பாண்டி நியமனம்!

Radheyan 29 Jul 2023 | 11:12 PM
பகிர்:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 வது அமைப்புத்தேர்தல் கிளைக்கழகம் தொடங்கி தலைமைக் கழக நிர்வாகிகள் வரையிலான தேர்தல்கள் நடந்துமுடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தல் மூலம் 75 ஆயிரம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மதுரையைச் சேர்ந்த சி.பூப்பாண்டி (இவரைப்பற்றி முழுமையாக அறிய நீல நிற எழுத்தில் விரல் வைக்கவும்) மாநில இளைஞரணி துணைச்செயலாராக நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்குப்பிறகு கட்சி செயல்பாடுகளில் சிறிது சுணக்கம் காணப்பட்ட நிலையில் துரை வைகோ தலைமை நிலையச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி தொடங்கிய காலம் முதல் ஏறக்குறைய 30 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களையும், தோல்விகளையும் சந்தித்துள்ள இக்கட்சியில் முன்னனி தலைவர்கள் பலர் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்காளாகி ஆளும், ஆண்ட கட்சிகளில் அடைக்கலம் தேடிவந்த நிலையில், துரை வைகோ என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்தது. இதற்கு மத்தியில் மிகுந்த நிதானத்தோடும், கண்ணியத்தோடும் அரசியல் செய்துவரும் துரை வைகோ, பொதுச்செயலாளருக்கு இணையாக தினந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளிலும், தொண்டர்கள் இல்ல விசேசங்களிலும் கலந்துகொண்டு கட்சியினருக்கு உற்சாகமூட்டி வருகின்றார். 


அந்தவகையில் துரைவைகோ வின் கண்ணசைவுக்கேற்ப காரியமாற்றும் முக்கிய தளபதிகளில் ஒருவர் மதுரை பூப்பாண்டி. ஏற்கனவே பொதுச்செயலாளர் வைகோ அவர்களால் மதிமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளராக நியமிக்கப்பட்ட பூப்பாண்டி, தற்போது மீண்டும் அதேபதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில இளைஞரணி செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் பூப்பாண்டி இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். 

சிறுவயதிலிருந்தே கட்சியின் தீவிர ஈடுபாடு கொண்டவர் சிறந்த களப்பணியாளராகவும் கட்சியினர் மத்தியில் பார்க்கப்படுபவர். கம்பளத்தார் சமுதாயத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக நிலவும் அரசியல் தலைமை வறட்சியை போக்கக்கூடிய வாய்ப்புள்ளவர். அரசியல் களத்தில் மதிமுக விற்கான இடத்தை தக்கவைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் துரைவைகோ விற்கு பக்கபலமாக இருப்பதின் மூலம் அக்கட்சிக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளில் பூப்பாண்டிக்கான இடம் நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கமுதி வட்டார சமுதாய இளைஞர்கள்.  


சி.பூப்பாண்டி அவர்களுக்கு மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பொறுப்பு வழங்கி கம்பளத்தாருக்கு தொடர்ந்து அரசியல் அரங்கில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், முதன்மைச்செயலாளர் துரை வைகோ அவர்களுக்கும் மற்றும் கழகத்தின் முன்னனி நிர்வாகிகளுக்கும் கம்பளத்தாரின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Poopandi thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண