தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
தணிக்கை குழு உறுப்பினராகிறார் வழக்கறிஞர் பழனிச்சாமி!

தணிக்கை குழு உறுப்பினராகிறார் வழக்கறிஞர் பழனிச்சாமி!

நிருபர் 01 Jun 2023 | 10:32 PM
பகிர்:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் நாமக்கல் B.பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார். இன்று மதிமுக வின் தலைமையகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆலோசனையின் பேரில் இப்பதவிக்கான வேட்புமனுவை வழக்கறிஞர் பழனிச்சாமி தாக்கல் செய்தார். மொத்தம் ஆறுபேர் கொண்ட தணிக்கை குழுவில் வழக்கறிஞர் பழனிச்சாமி அவர்களோடு வழக்கறிஞர்கள் அருணாச்சலம்,  பாசறை பாபு, செந்தில் செல்வன் மற்றும் பரமக்குடி கே.ஏ.எம்.குணா, பி.ஜி.பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


மொத்தம் ஆறுபேர் கொண்ட தணிக்கை குழுவில் வழக்கறிஞர் பழனிச்சாமி உள்ளிட்ட ஆறுபேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

புதிய நிர்வாகிகள் அனைவரும் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். தணிக்கைகுழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் நாமக்கல் பழனிச்சாமி அவர்களுக்கு சமுதாய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Advocate Palanisamy Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண