முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தபிறகே உள்இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும், முன்னேறிய உயர்சாதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு (EWS) வழங்கப்பட்ட 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஜூன் 12 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டததில் மாபெரும் ஆர்ப்பட்டத்திற்கு சமூகநீதி கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகள் திரளாக கலந்துகொள்ள வருமாறு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.இராமராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.