தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
ஜமீன்தாரிடம் சமூகநீதி மலர் வழங்கல்!

ஜமீன்தாரிடம் சமூகநீதி மலர் வழங்கல்!

Radheyan 09 Dec 2022 | 12:09 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பான சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி சமூகநீதி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இடஒதுக்கீடு குறித்த முழுமையான புள்ளி விவரங்கள் அடங்கிய சமூகநீதி மலர் வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு குறித்து 360 டிகிரி பன்முகப்பார்வை என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த மலர் இடஒதுக்கீடு பற்றிய வரலாற்றுக்களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடஒதுக்கீடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் மிகக்குறைந்த விலையிலும், தலைவர்களுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்கள் இராமபட்டிணம் ஜமீன்தார் விஷ்னுகாந்த சக்திவேல் ராஜா அவர்களிடம் சமூகநீதி மலரை வழங்கினார். 


கடந்த ஞாயிற்றுக்கிழமை (4.12.2022) அன்று விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவன தலைவர் P.V.இராதாகிருஷ்ணன் இல்ல விழாவில் ஜமீன்தார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் சமூகநீதி மலரை மு.பழனிச்சாமி வழங்கினார். அப்பொழுது தொழிலதிபர் மணிவாசகன், வழக்கறிஞர் பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ramapattinam Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண