தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
இடியாப்பச்சிக்கலை நோக்கி நகர்கிறதா இடஒதுக்கீடு வழக்கு?

இடியாப்பச்சிக்கலை நோக்கி நகர்கிறதா இடஒதுக்கீடு வழக்கு?

Radheyan 16 Feb 2022 | 04:16 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை  உச்சநீதிமன்ற நீதியரசர் நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது வழக்கின் தொடக்கத்திலேயே நீதியரசரர் நாகேஷ்வரராவ் இந்த வழக்கு இங்கேயே விசாரிக்கப்படலாமா அல்லது அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பதை தெளிவுபடுத்திவிட்டு வழக்கு விசாரணையை தொடங்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இதனால் வழக்கின்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

தமிழக அரசின் சார்பில் முதலில் வாதத்தை துவங்கிய மூத்தவழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தன்னுடைய தனிப்பட்ட கருத்து இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதே சிறந்தது என்று யோசனை தெரிவித்தார். அதேகருத்தை மற்றொரு மூத்த வழக்கறிஞரான எம்.என்.ராவ் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் வில்சன் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத்தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தார். 

இதன்மீதான விசாரணை இன்றும் நடைபெறவுள்ளதால் நமது தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை இன்று முன்வைக்க உள்ளனர். 

வழக்கு விசாரணையின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் முதலில் இதற்கு தீர்வு கண்டபின்பே மூலவழக்கின் விசாரணை தொடங்கும். இதனால் காலவிரயம், வழக்கறிஞர் கட்டணச்சுமைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண