தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
புதூர் பேரூராட்சி தேர்தல் களத்தில் நேரடியாக மோதும் வேட்பாளர்கள்!

புதூர் பேரூராட்சி தேர்தல் களத்தில் நேரடியாக மோதும் வேட்பாளர்கள்!

Radheyan 14 Feb 2022 | 04:40 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர்(வி) பேரூராட்சியில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த பலர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளதால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆளும் கட்சியான திமுக-வில் ஒருசிலரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் மிக அதிகப்படியானோரும் களம் புகுந்துள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவியை பெருவதில் கடும் போட்டி காணப்படுகிறது.

 இதில் புதூர்(வி) பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சூ,மல்லுச்சாமி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.

இதே வார்டில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் திரு.நா.முனீஸ்வரன் அவர்கள். இரு பிரதான கட்சி வேட்பாளர்களும்  ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் நேரடி போட்டி நிலவுகிறது.


இதே புதூர் (வி) பேரூராட்சி 12-வது வார்டில் அதிமுக சார்பில் திருமதி.அ.மலர்க்கொடி அவர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அதேபோல் இதே பேரூராட்சியில் 8-வது வார்டில் சுயோட்சையாக களமிறங்கியுள்ளார் திரு.கோ.செல்லப்பாண்டியன் அவர்கள். இவருக்கு தண்ணீர்குழாய் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் களத்தில் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் சாலைவசதி, குடிநீர்வசதி, தெருவிளக்கு, சுகாதாரம், முதியோர் உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு வழங்கி வாக்குவேட்டையாடி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு urban body election thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண