தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
மாநகராட்சி மாமன்ற வேட்பாளராக கம்பளத்தாருக்கு வாய்ப்பு!

மாநகராட்சி மாமன்ற வேட்பாளராக கம்பளத்தாருக்கு வாய்ப்பு!

Radheyan 03 Feb 2022 | 05:16 PM
பகிர்:

மாநகர மாமன்ற வேட்பாளராக கம்பளத்தாருக்கு வாய்ப்பு!

திருப்பூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பினனை கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த மூவர் இதுவரை வாய்ப்பு பெற்றுள்ளனர். 

திருப்பூர் மாமன்ற 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக திரு.K.வேலுமணி (47) களமிறங்குகிறார். இவரின் தந்தையார் திரு.கிருஷ்ணசாமி அவர்களின் காலந்தொட்டே அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவரான வேலுமணி அவர்கள் திருப்பூர் மாநகர் மாவட்ட தொட்டிபாளையம் பகுதிச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2006 முதல் 2011 வரை தொட்டிய மண்ணைரை ஊராட்சி துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இவரது துணைவியார் திருமதி.அமுதா வேலுமணி அவர்கள் தொட்டிய மண்ணரை ஊராட்சிமன்ற உறுப்பினராக 1996 முதல் 2006 வரை தொடர்ந்து பத்தாண்டுகள் பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருப்பூர் மாமன்ற 33-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக திருமதி.தமிழ்ச்செல்வி முத்துக்கிருஷ்ணன்(30) களமிறங்குகிறார். இவர் தொட்டிய மண்ணரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் (அமரர்).பொன்னுசாமி அவர்களின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னுசாமி அவர்கள் திருப்பூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக பொறுப்பு வகித்தவர். PMV ரியல்எஸ்டேட் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் P.முத்துகிருஷ்ணன் அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். இவரது  சகோதரர் திரு.விஸ்வநாதன் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி கோல்டன் நகர் பகுதி துணைச்செயலாளராக பொறுப்பு வகிக்கின்றார். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு  திரு.மா.தாமோதரன் அவர்கள் போட்டியிடுகின்றார். 

கோவை மாநகராட்சியில் 100-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திரு.N.செந்தில்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி 28-வது வார்டு உறுப்பினர் அதிமுக வேட்பாளராக திருமதி.மாரீஸ்வரி அவர்கள் போட்டியிடுகின்றார். இவர் தூத்துக்குடி மாவட்ட த.நா.வீ.க.பண்பாட்டுக்கழக மகளிரணி தலைவராக உள்ளார்.

நகர்ப்புறங்களில் மிகசொற்ப அளவிலேயே கம்பளத்தார்கள் வாய்ப்பு பெற்றிருப்பதால், கட்சி, மனமாட்சரியங்கள், மனஸ்தாபங்களை மறந்து ஒவ்வொரு கம்பளத்தாரும் தவறாது நமது வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதோடு, பிற சிறுபான்மை சமுதாய வாக்குகளையும், நடுநிலையாளர்கள் வாக்குகளையும் பெற்றுத்தர பாடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றவர்கள் இந்த வாய்ப்பினை வெற்றிகரமாக்கி சமுதாயத்திற்கு அரசியல் அடித்தளம் அமைத்திட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு dmk admk thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண