தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கம்பளத்தார் மீது தாக்குதல்: கொ.நாகராஜன் நேரில் ஆய்வு.

கம்பளத்தார் மீது தாக்குதல்: கொ.நாகராஜன் நேரில் ஆய்வு.

Radheyan 06 Dec 2021 | 11:59 PM
பகிர்:

கரூர் மாவட்டம், வெள்ளியனை காவல் சாரகத்திற்குட்பட்ட மேட்டுப்பட்டி கிராமத்தில் கம்பளத்தார் சமுதாய மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகின்றனர். கம்பளத்தார் தவிர பல்வேறு சமுதாய மக்களோடு அருந்ததியின மக்களும் வசித்து வருகின்றனர். கம்பளத்தார் சமுதாய மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கும், கூலி வேலைக்கும் சென்று வருகையில் தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக தெரிகிறது. நீண்ட நாட்களாக நீடித்து வரும் இந்த சம்பவத்தை கம்பளத்தார் சமுதாயத்தை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. 


வாய்த்தகராறில் தொடங்கிய சம்பவத்தை வைத்து கம்பளத்தார் சமுதாயத்தினர் மீது வன்கொடுமை வழக்கில் எதிர் தரப்பினர் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கவே கம்பளத்தார் அமைப்புகள் மேட்டுப்பட்டியை முற்றுகையிட்டனர். நேற்று விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கே.நாகராஜன் மேட்டுப்பட்டிக்கு சென்று கம்பளத்தாருக்கு ஆதரவு தெரிவித்ததோடு பிரச்சினைக்கு மூலகாரணமாக விளங்கும் தமிழ்ப்புலிகள் அமைப்பிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண