தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மேட்டுக்கடையில் விடுதலைக்களம் கட்சியின் கொடி பறக்குது!

மேட்டுக்கடையில் விடுதலைக்களம் கட்சியின் கொடி பறக்குது!

Radheyan 24 Oct 2021 | 07:01 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டத்திலுள்ள மேட்டுக்கடை கிராமத்தில் விடுதலைக்களம் கட்சியின் கொடியேற்று விழா மேற்கு மாவட்டச்செயலாளர் ஆர்.நடராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜ் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அப்பொழுது சமுதாய இளைஞர்கள் கல்வியறிவு பெற்றால் மட்டுமே போதாது, ஒழுக்கமும், சுயகட்டுப்பாடுகளும் மிக அவசியம். வளர்ந்துள்ள சமுதாயங்களின் பறந்துபட்ட பார்வையை உள்வாங்கிக்கொண்டு சமுதாயத்தை அடையாளப்படுத்தி, சமுதாய மக்களையும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை  தலைவர் மு.பழனிசாமி, பொருளாளர் சின்னுசாமி, தந்துவாடம்பட்டி தங்கவேலு, கூடச்சேரி அப்புசாமி  ஆகியோர் கலந்துகொண்டு வன்னியர் 10.5 விழுக்காட்டால் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ-மாணவியர் இந்தக்கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கிப்பேசினர். மேலும் இச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையான விளக்கங்களை உள்ளடக்கிய சமூகநீதி கூட்டமைப்பின்  துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.


இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் திரு.பூவரசிராஜேந்திரன், சி.பாலசுப்பிரமணி, தபால் கோபால் மற்றும் தூசுர், பாலப்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ko.nagarajan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண