தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் கி.இராம்குமாரை ஆதரித்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் போடி. சௌந்திரபாண்டியன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். மூக்குக்கண்ணாடி சின்னத்தில் போட்டியிடும் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு சமூகநீதி கூட்டமைப்பின் ஆதரவினை தெரிவித்து, சமுதாய மக்கள் மற்றும் முக்கியப்பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.தலைவர்கள் நீண்டதூரத்திலிருந்து வந்து ஆதரவுக்கரம் நீட்டியதற்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
விளம்பரங்கள்
கொ.நா. தலைமையில் கம்பளத்து வேட்பாளரை ஆதரித்து தென்காசியில் பிரச்சாரம்!
Radheyan
01 Oct 2021 | 11:26 PM
குறிச்சொற்கள்