தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
ஈரோடு,கரூரைத் தொடர்ந்து விருதுநகரிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய உரிமைக்கு சவால்!

ஈரோடு,கரூரைத் தொடர்ந்து விருதுநகரிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய உரிமைக்கு சவால்!

நிருபர் 19 Sep 2021 | 07:47 PM
பகிர்:

ஈரோடு, கரூர் மாவட்டங்களைத் தொடர்ந்து விருதுநகரிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய உரிமைக்கு சவால் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செங்குளம் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவிலில் 300 ஆண்டுகாலமாக கம்பளத்தார், வண்ணார், நாவிதர், ஆசாரி சமூகங்களோடு இணைந்து  வழிபட்டு வருகின்றனர். இந்த பாரம்பரிய உரிமைமிக்க இக்கோவிலில் பீடம் அமைக்க கிராமத்தினர் ஒருமனுதாக தீர்மானித்து பொதுமக்கள் நன்கொடையுடன் பணியை தொடங்கிய நிலையில், இந்த கிராமத்திலிருந்து பலஆண்டுகளுக்கு முன் வெளியூருக்கு குடிபெயர்ந்த ஒருவர் அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரை மையமாக வைத்து அதிகாரிகள் வாய்மொழியாக தடை ஏற்படுத்தி வருகின்றனர். அதிகாரிகளின் இந்த அத்துமீறலைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் நாளை மனு அளிக்கவுள்ளார் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்கின்றனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ko.nagarajan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண