தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
 உரிமையை மீட்போம்! படைதிரண்டு வாரீர்!

உரிமையை மீட்போம்! படைதிரண்டு வாரீர்!

Radheyan 04 Sep 2021 | 04:12 PM
பகிர்:

உறவுகளுக்கு காலை வணக்கம்.

அநீதியாக நடந்துகொண்ட அதிமுக, திமுக அரசுகளைக் கண்டித்து, நாம் நடத்துகின்ற முதல் சமூகநீதி முழக்கத்திற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.  செப்டம்பர் திங்களில் சென்னையை குலுக்கவுள்ள இப்பேரணி மூலம் வாக்கு அரசியலுக்காக ஒற்றை சாதிக்கு துணைபோகும் அரசுக்கும், கள்ள மௌனம் கத்துவரும் அரசியல் கட்சிகளுக்கும் எச்சரிக்கை செய்யவுள்ளோம். 

தமிழக அரசியல் வரலாற்றை புரட்டப்போகும் இப்பேரணிக்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அனைத்து உறவுகளும் ஒன்றாக கரம் கோர்த்து, பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் மீட்டெடுக்க சென்னை நோக்கி பெருந்திரளாக உறவுகள் பயணப்பட வேண்டும். நீங்கள் பயணப்படும் வாகனங்கள் நேர்த்தியானதாகவும்,  எல்லா சட்ட ஆவணங்கள் உடையதாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓட்டுநர்கள் ஒழுக்கமும்,  திறமையும் உடையவர்களாக பார்த்துக்கொள்வது அவசியம். வழிகளில் மிக கவனமாக வர வேண்டும்.  நாம் கொள்ளையடிக்க செல்லவில்லை. நமது பறிக்கப்பட்ட உரிமைகளைக் மீண்டும் வழங்கக்கோரி முழக்கம்  எழுப்ப செல்கின்றோம். எனவே யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. அதேபோன்று நாம் அனைவரும் பல விதமான சிரமங்களை விரும்பி ஏற்று சமுதாய உரிமைக்காக ஒன்று இணைந்துள்ளோம். எனவே சிறுசிறு சிரமங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தூசி போல் தட்டிவிட்டு நமது அவசியமான அவசரமான இலக்கை நோக்கி அனைத்து உறவுகளும் பயணிக்கவேண்டும். சென்னை சமூகநீதி உலகத்திற்கு வருகை தருகின்ற உறவுகளுக்கு தொடர்ந்து வழி காட்டுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் போராட்ட குழு தயாராக உள்ளது. உங்களுக்கு எந்தவிதமான ஐயங்கள் எழுந்தாலும் நீங்கள் போராட்ட குழு உறுப்பினர்களைக் கலந்து விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எல்லா சமுதாய உறவுகளுக்கும் 100 விழுக்காடு உத்தரவாதமாக சொல்ல விரும்புவது, போராட்டம் அமைதியாகவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல், எத்தனை விதமான அச்சுறுத்தல்களும் அடக்கு முறைகள் இருந்தாலும் நமது முதல் போராட்டம் எழுச்சியோடும், வீரியத்தோடும், நமது முன்னோர்களுடைய ஆசியோடும் அருளோடும் வெற்றிகரமாக நடந்தேறும்.


இவண்,

சமூகநீதி கூட்டமைப்பு போராட்டக்குழு.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண