தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - பொள்ளாச்சி - திரு.S.பெருமாள்சாமி

நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - பொள்ளாச்சி - திரு.S.பெருமாள்சாமி

Admin 08 Oct 2020 | 04:08 PM
பகிர்:

திரு.S.பெருமாள்சாமி அவர்கள் 13.05.1972-இல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள சந்தேகவுண்டன்பாளையம் கிராமத்தில் திரு.சென்னப்பன் – திருமதி.சரஸ்வதி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் (DECE) பட்டயம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.P.தேவி என்ற மனைவியும் P.கோகுல் என்ற மகனும் உள்ளனர். இவர் கோவையில் G Tower என்ற பெயரில் திருமண மண்டபம், மகளிர் விடுதி, லாட்ஜ், ஹோட்டல் போன்றவற்றை நடத்தி வருகிறார்.  

postgallery(219)

மாணவப்பருவத்திலிருந்தே திரு.வைகோ அவர்களின் நாடாளுமன்ற வாதத்திலும், மேடைப்பேச்சிலும் கவரப்பட்டு, தி.மு.க-ஆதரவாளராக இருந்துவந்த திரு.பெருமாள்சாமி அவர்கள், திரு.வைகோ அவர்கள் மதிமுக-வை துவங்கியபொழுது அக்கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றத்தொடங்கியவர், 1996 ஆம் ஆண்டு ம.தி.மு.க 6-வது பகுதி கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு மாவட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் படிப்படியாக வளர்ந்துவரும் திரு.பெருமாள்சாமி அவர்கள் சமீபத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட மதுக்கரை கிழக்கு ஒன்றியத்தின் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீவிர கட்சித்தொண்டரான திரு.பெருமாள்சாமி அவர்கள் ம.தி.மு.க அறிவிக்கும் கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், நடைபயணங்கள், போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். 

திரு.பெருமாள்சாமி அவர்கள் வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளன்று ஈச்சனாரியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு கூட்டம் ஏற்பாடு செய்து புகழஞ்சலி செலுத்துவது வழக்கம். மேலும் ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளரும், சமூகநலப்போராளியுமான திரு.ஈஸ்வரன் தலைமையில் போராட்டங்களில் பங்குபெற்று வருகிறார்.

postgallery(219)

இதுவரை தேர்தலில் எந்த பதவிக்கும் போட்டியிடாதவர், சாதி, மதம் பாகுபாடின்றி உதவிதேடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார். கொரோனா  பொதுமுடக்கத்தின் காரணமாக  வாழ்வாதரங்களை இழந்துவாடிய ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.  வளர்ந்துவரும் இளம் அரசியல் தலைவரான திரு.பெருமாள்சாமி அவர்கள் வரும் காலங்களில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.  

குறிச்சொற்கள்

இளம் அரசியல் பிரமுகர்கள் தமிழ்நாடு Mr.S.Perumalsamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண