Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
அரசியல் வானில் ஒளிரும்  நட்சத்திரம் - சத்தியமங்கலம்.திரு.N.பவுல்ராஜ்

அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - சத்தியமங்கலம்.திரு.N.பவுல்ராஜ்

Senthilkumar 27 May 2020 | 07:29 PM
பகிர்:

திரு.N.பவுல்ராஜ் அவர்கள் 13.03.1963 ஆம் ஆண்டு திரு. நாக நாயக்கர், திருமதி. பொம்மக்காள் தம்பதிகளுக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாரனூர் கிராமத்தில், விவசாய குடும்பத்தில், மகனாக பிறந்தார்.உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் பின் விவசாயப்பணிகளில் ஈடுபட்டார். இவருக்கு திருமதி.P.கார்த்திகேயனி என்ற மனைவியும், P.சந்தோஷ் குமார் என்ற மகனும், P.சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

postgallery(23)

விவசாயம் தவிர, சத்தியமங்கலத்தில் BVS Vegetables என்ற பெயரில் காய்கறி நிறுவனத்தை தொடங்கி, கேரள மாநிலத்திற்கு நீண்ட நாட்களாக நேரடி விற்பனை செய்துவருகிறார். மேலும் ஸ்ரீ அண்ணாமலையார் ஆட்டோ பைனான்ஸ் என்ற பெயரில் நிதிநிறுவனமும் நடத்திக்கொண்டுள்ளார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், 1985 ஆண்டு அதிமுக கிளைக்கழக செயலாளராக அரசியல் பொதுவாழ்வை துவங்கினார், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். 1996 ஆம் ஆண்டு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை தொடங்கி, அதன் தலைவராக மீண்டும் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

postgallery(23)

மேற்கு மண்டலத்தில் சமுதாயத்தினரிடையே நெருங்கிய தொடர்பில் உள்ளவர், சமுதாய சேவை மீதான ஆர்வத்தால் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் ஈரோடு மாவட்டத் தலைவராக 2014 முதல் 2018 வரை பொறுப்புவகித்தார்.சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள நலச்சங்கத்தின் அனைத்து விழாக்களிலும் , தூரங்களைப் பொருட்படுத்தாது கலந்து கொண்டு ஊக்கப்படுத்துபவர்.

தற்பொழுது ரஜினி மக்கள் மன்றத்தின் சத்தியமங்கலம் நகர செயலாளராக திறம்பட பணியாற்றி வரும் திரு. பவுல்ராஜ் அவர்கள், சென்னை,வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டுமானப் பணிக்காக நன்கொடை வழங்கிய “சில்வர் கிளப்” உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.பவுல்ராஜ் அவர்கள் அரசியல் பொதுவாழ்வில் சிகரங்களை தொட்டிட அன்புடன் வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Sathiyamangalam.Mr.N.Pavulraj Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண