தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
ஒன்றியக்குழு உறுப்பினர்- அந்தியூர்-திருமதி.வளர்மதி தேவராஜ்

ஒன்றியக்குழு உறுப்பினர்- அந்தியூர்-திருமதி.வளர்மதி தேவராஜ்

Admin 21 Jun 2020 | 04:33 PM
பகிர்:

திருமதி.வளர்மதி தேவராஜ் அவர்கள், 1982- இல் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள முனியப்பம்பாளையம்  கிராமத்தில் திரு.அர்த்தநாரி நாயக்கர் – திருமதி. காலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், அதே ஊரைச் சேர்ந்த திரு.தேவராஜ் அவர்களை மணமுடித்துள்ளார்.


திரு.தேவராஜ்.B.Sc., அவர்கள் 13.09.1972-இல் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள முனியப்பம்பாளையம்  கிராமத்தில் திரு.மாச நாயக்கர் – திருமதி. இராமக்காள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இளங்கலை பட்டம் பெற்றுள்ள திரு.தேவராஜ் அவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திரு.தேவராஜ்-திருமதி.வளர்மதி தம்பதிகளுக்கு D.திருமலை, D.சீனிவாசன் என்ற இருமகன்கள் உள்ளனர்.

1993-இல் அஇஅதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்ததின் மூலம், தனது 20-ஆவது வயதில் அரசியல் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தார் திரு.தேவராஜ் அவர்கள். ஒருசில ஆண்டுகளில் கிளைக் கழகப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், சுமார் இருபதாண்டுகாலம் அப்பொறுப்பில் நீடித்து வந்தார். அதன்பின் முனியப்பம்பாளையம் ஊராட்சிக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டவர், கட்சி அப்பதவியை இரத்து செய்யும் வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்து வந்தார். கட்சிப்பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்ட திரு.தேவராஜ் அவர்கள், கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்பொழுது வழங்கும் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். தவிர கட்சி நடத்தும் அனைத்து நிகழ்விலும் கலந்து கொள்ளும் திரு.தேவராஜ் அவர்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்கு பெருமளவு மக்களுடனும், உள்ளூர் கழக நிர்வாகிகளுடனும் கலந்து கொண்டு வருகிறார்.

அரசியல் பொதுவாழ்வில் ஏறக்குறைய முப்பதாண்டு காலம் பயணித்திருந்தாலும் தேர்தல் அரசியலை தவிர்த்து வந்த திரு.தேவராஜ் அவர்கள், 2018-ஆம் ஆண்டு தொண்டையம்பாளையம் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அந்தியூர் ஒன்றியம் 11 வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, அஇஅதிமுக சார்பில் தனது துணைவியார் திருமதி.வளர்மதி அவர்களை வேட்பாளராகக் களமிறக்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலிலேயே மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார். மிக நீண்ட அரசியல் அனுபவமுள்ள திரு.தேவராஜ்-திருமதி.வளர்மதி தம்பதியினர் இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் சிறப்பாக பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.


குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Anthiyur union Councilor Mrs.Valarmathi Devaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண