தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி வேந்தர் - திரு.R.மாசையன்.

நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி வேந்தர் - திரு.R.மாசையன்.

Radheyan 11 Mar 2022 | 04:47 PM
பகிர்:

திரு.R.மாசையன் அவர்கள் 20.02.1955- இல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையை அடுத்துள்ள இராமச்சந்திராபுரம் கிராமத்தில் திரு.ரங்கசாமி நாயக்கர் - திருமதி.முத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். இடைநிலைக்கல்வி வரை பயின்றவர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி திருமதி.சுகுணாதேவி என்ற மனைவி உள்ளார்.

எம்ஜிஆர் அவர்களின் திரைப்பட ரசிகரான திரு.மாசையன் அவர்கள், அதிமுக-வின் தொடக்ககாலம் முதல் அதிமுக உறுப்பினராக இருந்தவர். 2017-வரை அதிமுக-வில் தொடர்ந்தவர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப்பிறகு திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்துக்கொண்டார். ஒடையகுளம் பேரூராட்சியில் வார்டு செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் திரு.மாசையன்.

1996-முதல் உள்ளாட்சித் தேர்தல்களம் கண்டுவரும் திரு.மாசையன் இதுவரை மூன்றுமுறை ஒடையகுளம் பேரூராட்சி வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அப்பகுதியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து மக்களின் ஆதரவைப்பெற்றவர். கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒடையகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நான்காவது முறையாக வெற்றிவாகை சூடியுள்ளார். மக்கள் சேவையில் நீண்ட அனுபவமுள்ளவரான திரு.மாசையன் அவர்கள் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பேதமின்றி பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Mr.Masaian thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண