Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு- கம்பளத்தார் சார்பில் வாழ்த்து கடிதம்!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு- கம்பளத்தார் சார்பில் வாழ்த்து கடிதம்!

Radheyan 12 Oct 2022 | 04:34 PM
பகிர்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது பொதுத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இறுதியாக கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் வாழும் கம்பளத்தார் சார்பில் திமுக தலைவருக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக தலைவருக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது.

வணக்கம். 73-ஆண்டுகால திராவிட பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய அரசியலில் மொழி, இனம், மாநில சுயாட்சி, கல்வி, சுயமரியாதை, பெண்ணுரிமை, தொழிலாளர்கள், விவசாயிகள்  உள்ளிட்ட அனைத்து தளங்களிலும், ஒரு மாநிலக்கட்சியாக கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வைத்துக்கொண்டு ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உலகில் எந்தக்கட்சியாலும் செய்ய முடியாத அரிய பல சாதனைகளை செய்துள்ளது வரலாற்று உண்மை. 

இந்திய நிலப்பரப்பின் தொன்மை வாய்ந்த பூர்வகுடி திராவிட இனக்குழுவின் அடையாளங்களை  தின்று தீர்த்துவிட கரையான்கள் எத்தனித்துக் கொண்டிருக்கும் வேளையில், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" கழகத்தின் தளபதியாய் மட்டுமல்லாது,  திராவிட இனத்தின் கவச குண்டலமாய், ஒப்பாரும், மிக்காரும் இல்லா தளபதியாய், கல்லடிகளையும், சொல்லடிகளையும் பொருட்படுத்தாமல், கண்துஞ்சாமல் பணியாற்றும் கடைமை வீரரை இரண்டாவது முறையாக தலைவராய் கழகமும், தமிழக முதல்வராய் மக்களும் பெற்றிருப்பது, எப்போதாவது கிடைக்கும் பரிசுபோல இயற்கை மக்களித்த "பம்பர் பரிசு" என்றால் மிகையல்ல.

தொண்டர்களும், கழகமும் பூரிப்பின் உச்சத்தில் மகிழ்ந்திருக்கும் இத்தருணத்தில், கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தங்களுக்கும், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப்பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு mk stalin thottianaicker www.thottianaiicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண