தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
5000 புழுக்கள் குடிகொண்ட சர்க்கரை நோயாளியின் இடது காலை சேதாரமின்றி காப்பாற்றி சாதனை!

5000 புழுக்கள் குடிகொண்ட சர்க்கரை நோயாளியின் இடது காலை சேதாரமின்றி காப்பாற்றி சாதனை!

Radheyan 25 Jan 2026 | 12:47 AM
பகிர்:

பத்தாண்டுகால சர்க்கரை நோயாளியின் காலில் இருந்த புண்ணிலிருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாகோட் புழுக்களை (Maggot Wound) அகற்றி, 67 வயதுடைய மூத்த குடிமகனைக் காப்பாற்றியுள்ளார் கரூர் சந்திரா வடிவேல் மருத்துவமனை மருத்துவர் வி.பாஸ்கரன். கரூர் மாவட்டத்திலேயே முதல்முறையாக எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல், சர்க்கரை நோயாளியின் இடதுகாலில் இருந்த புண் மருந்துகள் மூலமே குணப்படுத்தப்பட்டு, பூரண குணம்பெற்று மகிழ்ச்சியோடு வீடு திரும்பியுள்ளார் நோயாளி. இதுபற்றிய சுவாரஸ்யமான தகவல் விவரம் வருமாறு,

கரூர் மாவட்டம் மாயனூரைச் சேர்ந்தவர் 67 வயதுடைய கண்ணன். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சக்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டபடி தனது அன்றாட வாழ்க்கையை தொடர்ந்துவந்தார். இந்நிலையில், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் எமனாக வந்துசேரும் கொப்பளம் ஒன்று கண்ணனின் இடதுகாலில் வந்துள்ளது. கிராமத்திற்கே உரிய வழக்கப்படி இலை தழைகளை வைத்துக்கட்டி சரிசெய்ய முனைந்துள்ளார். ஆனால் இரண்டு மாதமாகியும் புண் குணமாகியபாடில்லை. மாறாக, நாட்கள் செல்லச்செல்ல நடக்கவும் முடியவில்லை. உயிர் போகும் வலியோடு புண்ணும் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. ஆபத்தை உணர்ந்த அக்கம்பக்கத்து உறவினர்கள் கரூரில் சர்க்கரை நோயிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்துவரும் சந்திரா வடிவேல் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து சந்திரா வடிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணனை சோதித்த மருத்துவர் பாஸ்கரன், 25 செமீ நீளமும், 10 செமீ அகலமுள்ள 5 ஆயிரத்திற்குமேற்பட்ட புழுக்கள் (Maggot Wood) அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். வழக்கமாக இவ்வளவு முற்றிய நிலையிலுள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றினால் தான் புண் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்படுவதோடு, நோயாளியின் உயிரையும் காப்பாற்றமுடியும். ஆனால் மருத்துவர் பாஸ்கரன் தனது நீண்ட அனுபவத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்யாமலே, நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மயக்க நிவாரணிகள் மூலம் குணப்படுத்தும் முயற்சியில்  இறங்கினார். இதற்கு நோயாளி கண்ணனும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். இறுதியில் நான்கு மாதகாலம் தொடர்சிகிச்சையின் பலனாக கண்ணனின் இடது காலில் இருந்த புண் முழுமையாக குணப்படுத்தப்பட்டது.   

இதுகுறித்துப்பேசிய கண்ணனின் குடும்பத்தினர், "காலில் ஏற்பட்ட கொப்பளம் வற்றாத நிலையில், ஒரு காலை எடுத்துவிட்டாலும் பரவாயில்லை, உயிரைக்காப்பாற்றினால் போதும் என்ற மனநிலையில் தான் இங்கு (சந்திரா வடிவேல் மருத்துவமனை) வந்தோம். ஆனால் நாங்களே நம்பமுடியாத வகையில், மருத்துவர் பாஸ்கரன் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து, உயிரை மட்டுமல்ல முழு காலையும் காப்பாற்றித்தந்துள்ளார். இப்பொழுது அவர் (கண்ணன்-நோயாளி) யார் உதவியுமின்றி நடைப்பயிற்சி செய்கிறார்"  என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர். சிகிச்சைபற்றிப் பேசிய மருத்துவர் பாஸ்கர் "கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக, நாட்பட்ட சர்க்கரை நோயாளியின் புண் எவ்வித அறுவை சிகிச்சையின்றி முழுமையாக குணப்படுத்தப்பட்டிருப்பதாக" தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Dr.Baskaran thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண