தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
இஸ்லாமியர் வசம் ஜெருசலேம் புனித கல்லறை சாவி!

இஸ்லாமியர் வசம் ஜெருசலேம் புனித கல்லறை சாவி!

Radheyan 19 Jan 2026 | 10:06 PM
பகிர்:

ஜெருசலேம் புனித மலையில் (Temple Mount / (Haram al-Sharif) கிமு 10 ஆம் நூற்றாண்டில் சாலமன் என்ற அரசனால் முதன்முதலாக யூதர்களுக்கான ஆலயம் கட்டப்பட்டது.  இந்த ஆலயமானது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பாபிலோனிய பேரரசர் (கிமு.605 - 562) நெபுகத்நேசர் படைகளால் தகர்க்கப்பட்டது. பின்னர் பாரசீக ஆதரவுடன்  ஹேரோத் என்ற யூத அரசனால் கிமு 516 இல் கட்டப்பட்ட இரண்டாவது ஆலயம் கிபி 70-இல் ரோமப்பேரரசர் டைட்டஸ் என்பவரால் ஒரே ஒரு சுவரைத் தவிர்த்து (மேற்கு சுவர் -Wailing Wall) முற்றிலும் அழிக்கப்பட்டது.

மீண்டும் அங்கு தங்களுக்கான ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்பது உலக யூதர்களின் கனவு. மூன்றாவது முறை கோவில் கட்டப்படுவதோடு உலகம் முடிவுக்கு வரும் என்று கூறுகிறார்கள். இடிக்கப்பட்ட கோவில் இருந்த திசை பார்த்துதான் முகமது நபி காலத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை வைத்தார்கள்.

ரோம் அரசு கிறிஸ்தவமாகிய பின்னர் ஜெருசலேமில் புனித கல்லறை ஆலயம் (Church of Holy Sepulchre) கட்டப்பட்டது. ஜெருசலேம் அரபியர்கள் வசம் சென்ற பின்னர் புனித மலையில் அல்-அஸ்கா மசூதி கட்டப்பட்டது. இன்று மக்கா, மதீனாவுக்கு இணையான புனித இடம்.

தொடர்ந்து நடந்த சிலுவைப் போர்களினால், ஜெருசலேம் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று மாறி, மாறி கை மாறிய கொடூரங்களில் சின்னாபின்னமானது அப்பாவி மக்கள்தான். ஜெருசலேமில் முதல் கோவிலைக் கட்டிய யூதர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதுவும்  கிறிஸ்தவர்கள் யூதர்களை எதிர்களாகப் பார்த்ததில், பெருமளவுக்கு யூதர்களுக்கு அடைக்கலமாக இருந்தது அரபியர்கள்.

1192ம் ஆண்டு மூன்றாவது சிலுவைப் போரின் இறுதியில் கிறிஸ்தவ ரிச்சர்ட் மன்னனுக்கும், இஸ்லாமிய சலாவுதினுக்கும்  ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பெயரில் ஜெருசலேம் சலாவுதினின் கட்டுப்பாட்டிலேயே இருப்பது என்பது முடிவாயிற்று. ஆனால் அய்ரோப்பியர்கள் ஜெருசலேமுக்குள் வரவும், புனித கல்லறை ஆலயத்தில் பூசை நடத்தவும் அனுமதிக்கப்பட்டார்கள். 

கிறிஸ்தவர்களிடையே இரு பெரிய பிரிவுகள், இருவரும் ஆலயத்துக்கு உரிமை கோரினார்கள். சலாவுதின், ‘இருவருக்கும் வேண்டாம். ஆலய பூசையை பகிர்ந்து கொள்ளுங்கள், ஆலய மேற்பார்வை இஸ்லாமியரான கானிம்-அல்-கஸ்ராவிடம் இருக்கட்டும் என்று பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

உலக கிறிஸ்தவர்கள் மிகப் புனிதமாகக் கருதும் ஜெருசலேம் புனித கல்லறை கோவிலின் சாவி ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இன்று வரை அதே இஸ்லாமியக் குடும்பத்தின் கைகளில் இருக்கிறது. 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு jerusalem thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண