தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
குரூப் தேர்வில் வெற்றிபெற்ற பொறியாளர்கள் பிரவின், கோகுல் ஆகியோருக்கு வாழ்த்துகள்!

குரூப் தேர்வில் வெற்றிபெற்ற பொறியாளர்கள் பிரவின், கோகுல் ஆகியோருக்கு வாழ்த்துகள்!

Radheyan 13 Dec 2025 | 06:58 PM
பகிர்:

கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இராஜகம்பள சமுதாய உறவுகள், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்று, முறையே கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள சூராநாயக்கனூரைச் சேந்தத திரு.எர்ரநாயக்கர் - திருமதி.நஞ்சம்மாள் ஆகியோரின் மகனான இ.பிரவின்குமார், அமைப்பியல் (கட்டடவியல்) துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய நில அளவையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று வேலூர் மாவட்டத்தில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல், கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், சின்னப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திரு.முருகேசன் - திருமதி இராமாயம்மாள் ஆகியோரின் மகனான எம்.கோகுல், இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர், இவர் தமிழக அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குரூப்4 தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று தமிழக அரசில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள பொறியாளர்கள் பிரவின்குமார், கோகுல் ஆகியோருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு TNPSC thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண