தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மாவட்டம் தோறும் மருத்துவ முகாம் நடத்த தீவிர முயற்சி!

மாவட்டம் தோறும் மருத்துவ முகாம் நடத்த தீவிர முயற்சி!

Radheyan 03 Mar 2022 | 04:46 PM
பகிர்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பது குறள் (குறல் எண்:948, அதிகாரம்:மருந்து). பொருளாதார கட்டமைப்பில் மருத்துவத்துறையில் புழங்கும் பணப்புலக்கம் மிகமுக்கியமானதும், நிரந்தரமானதுமான ஒன்று. நவீன முதலாளித்துவ உலகில் 40-க்குப் பிந்தைய மனித வாழ்க்கையில் மருத்துவத்திற்கு செலவிடும் தொகை குடும்ப வருவாயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே நோய்கள் மற்றும் மருத்துவம் குறித்தான விழிப்புணர்வு அதிகம் தேவைப்படும் காலமாக இருக்கிறது. அத்தேவையை முன்கூட்டியே கண்டறிந்து குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

அந்தவகையில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நமது சமுதாய மருத்துவர்களைக்கொண்டு காணொளி மூலமாக இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடுத்த கட்ட நகர்வாக  மக்களுக்கு நேரடியாக மருத்துவமுகாம் மூலம் ஆலோசனை வழங்கவும், குறைந்த செலவில் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கிட நமது மருத்துவர்கள் உதவியுடன் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கல்வி அறக்கட்டளை, விடுதலைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திட முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Medical Camp thottianaicker thotttianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண