தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பள சமுதாய நலச்சங்க மாவட்டத் தலைவர் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! • ஸ்பார்டாவின் ஹெலாட்டுகள் – வெற்றியாளர்களின் நிலத்தில் உழைத்த அடிமை மக்கள் • கிராமத்து மைதானத்திலிருந்து சர்வதேச ஜூனியர் களம் வரை! U-20 கபடியில் இந்தியாவுக்காகக் கோப்பை வென்ற இராஜகம்பளத்து இளைஞர் நாகராஜ்! • பக்கிங்ஹாம் கால்வாயின் மறுமலர்ச்சி – மீண்டும் உயிர்பெறுமா சென்னையின் வரலாற்று நீர்வழி? • இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஆலோசகர் T. நாராயணன் இல்லத் திருமண விழா! - மணமக்களுக்கு நேரில் வாழ்த்து. • இராஜகம்பள சமுதாய நலச்சங்க மாவட்டத் தலைவர் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! • ஸ்பார்டாவின் ஹெலாட்டுகள் – வெற்றியாளர்களின் நிலத்தில் உழைத்த அடிமை மக்கள் • கிராமத்து மைதானத்திலிருந்து சர்வதேச ஜூனியர் களம் வரை! U-20 கபடியில் இந்தியாவுக்காகக் கோப்பை வென்ற இராஜகம்பளத்து இளைஞர் நாகராஜ்! • பக்கிங்ஹாம் கால்வாயின் மறுமலர்ச்சி – மீண்டும் உயிர்பெறுமா சென்னையின் வரலாற்று நீர்வழி? • இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஆலோசகர் T. நாராயணன் இல்லத் திருமண விழா! - மணமக்களுக்கு நேரில் வாழ்த்து.
விளம்பரங்கள்
இராஜகம்பள சமுதாய நலச்சங்க மாவட்டத் தலைவர் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

இராஜகம்பள சமுதாய நலச்சங்க மாவட்டத் தலைவர் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

Admin 27 Nov 2026 | 11:00 AM
பகிர்:

இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோவை தெற்கு மாவட்டத் தலைவரும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளருமான திரு. த. குணசேகரன் அவர்களின் தந்தையார் திரு. தங்கவேல் நாயக்கர் அவர்கள் இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்குச் சமுதாயத் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. குணசேகரன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன். தந்தையாரை இழந்து வாடும் திரு. குணசேகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், திரு. தங்கவேல் நாயக்கர் அவர்களின் மறைவுக்குக் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கே.டி. மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில்குமார், மகளிரணி அமைப்பாளர் திருமதி. பாக்கியலட்சுமி ஆகியோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் நேரில் சென்று அன்னாரது உடலுக்கு இறுதி அஞ்சலியும் செலுத்தினர்.

அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு இராஜகம்பள சமுதாயம் இரங்கல் செய்தி தங்கவேல் நாயக்கர் த. குணசேகரன் கோவை செய்திகள் சமுதாயத் தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண