Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
இராஜகம்பளத்தாரின் உறவுப்பாலமே.... உனை இழந்தோம்....

இராஜகம்பளத்தாரின் உறவுப்பாலமே.... உனை இழந்தோம்....

பகிர்:

சமுதாயம் என்று யார் வந்தாலும், தனது இல்லத்தையே முகவரியாக்கி, திருப்பூர் மாநகரில் இராஜகம்பளத்தார் அமைப்புகளுக்கு வேடந்தாங்கலாக விளங்கிய லாரி சண்முகம் அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்அதன் விவரம் வருமாறு,

திருப்பூர் மண்ணரை சத்யா காலனியைச் சேர்ந்தவர் திரு.சண்முகம். உள்ளாட்சித் தேர்தலில் லாரி சின்னத்தில் போட்டியிட்டதால் லாரி சண்முகம் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவர்.  சிறந்த சமுதாயப் பற்றாளரான சண்முகம் அவர்கள், இராஜகம்பள மகாஜன சங்கம் வீரியமாக செயல்பட்ட காலத்திலிருந்து சமுதாயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருப்பூர் பாரப்பாளையம் சந்திப்பில் மாவீரன் கட்டபொம்மன் சிலை நிறுவிட அரும்பங்காற்றிய முக்கியத் தளபதிகளில் ஒருவர். 

எந்த அமைப்புகள் உதவிதேடி வந்தாலும் இன்முகத்தோடு கம்பளத்தார் இல்லந்தோறும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைக்கும் பண்பாளர். எடுத்த காரியம் இலக்கை எட்டும்வரை ஓயாமல் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும் ஊக்க சக்தியாக விளங்கியவர் சண்முகம். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் வளர்ச்சிக்கு திருப்பூர் மண்டலத்தில் ஆகப்பெரும்பணியாற்றியவர். கடந்த பல வருடங்களாக, இராஜகம்பள சமுதாய நலச்சங்க காலண்டரை நன்கொடையாளர் இல்லந்தோறும் நேரில் தேடிச்சென்று வழங்கி மிகப்பெரும் உறவுப்பாலமாக லாரி திரு.சண்முகம் அவர்கள் விளங்கினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்துவந்த திரு.சண்முகம் அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார்.  

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு அவராற்றிய நற்பணிகளுக்காக முப்பெரும் விழா மேடையில் கௌரவிக்கப்பட்ட லாரி திரு.சண்முகம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தலைவர் செ.இராதாகிருஷ்ணன், கொங்கு மண்டலத்தில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு பெருந்தூணாகவும், உறவுப்பாலமாகவும் விளங்கியவர் திரு.சண்முகம். அன்னாரின் மறைவு சங்கத்திற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே பேரிழப்பு என்று தெரிவித்துள்ள செ.இராதாகிருஷ்ணன், சண்முகம் அவர்களிய இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Shanmugam thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண