Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
நன்கொடையாளர், ஆசிரியர் திரு.இராமன் மறைவுக்கு இரங்கல்.

நன்கொடையாளர், ஆசிரியர் திரு.இராமன் மறைவுக்கு இரங்கல்.

Radheyan 18 Oct 2025 | 04:23 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு.ராமன் M. A., B.T.,அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை காலமானார். அன்னாின் மறைவிற்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.ராமன் M. A., B.T.,  பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.இராமன் அவர்கள் மிகுந்த சமுதாயப்பற்று கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், காவல்துறை முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளருமான நினைவில் வாழும் S.G ராமசாமி அவர்களின் தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தலைநகரில் கம்பளத்தாருக்கென்று ஒரு கட்டடத்தை உருவாக்க வேண்டும் என்று நிர்வாகிகள் முடிவெடுத்தபோது முதன்முதலில் ரூபாய் 10,000/- வழங்கி நம்பிக்கையூட்டியவர் என்பது இராஜகம்பள சமுதாய நலச்சங்க வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

பணிநிறைவுக்குப்பிறகு குடும்பத்தினருடன் சொந்த கிராமத்தில் வசித்துவந்த இராமர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு இயற்கை எய்தினார்.  அன்னாரின் பூத உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப்பின் இன்று (18.10.2025-சனிக்கிழமை) பாலவனத்தம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆசிரியரும், சங்க நங்கொடையாளருமான அமரர்.இராமர் அவர்களின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ. இராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Raman thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண