Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் இல்லத் திருமணவிழா!

இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் இல்லத் திருமணவிழா!

Radheyan 21 Feb 2025 | 12:56 AM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் இல்லத் திருமண வரவேற்பு மற்றும் திருமணவிழா முறையே நாளை (22.02.2025) சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் (23.02.2025) ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இத்திருமண விழாவில் சமுதாயத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். இதன் விவரம் வருமாறு,

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் மறைந்த ஆர்.சென்னையா நாயக்கர் அவர்களின் மகன் வழிப்பெயரனும், மேற்படி சங்கத்தின் தற்போதைய தலைவரும், தொழிலதிபருமான திரு.எஸ்.இராதாகிருஷ்ணன்- திருமதி ஆர்.இந்திராணி ஆகியோரின் அன்புமகன் ஆர்.சக்திவேல் ராஜன் B.Arch., M.B.A., சென்னை, அண்ணாநகர், திரு.ஆர்.மனோகர்- திருமதி எம்.மஞ்சுளா ஆகியோரின் அன்புமகள் எம்.ரவீணா B.Arch., ஆகியோரது திருமணம் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, நீலங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே.கன்வென்சன் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 முதல் 9.00 மணிக்குள் நடைபெறவுள்ளது.


முன்னதாக, நாளை (22.02.2025) சனிக்கிழமை மாலை 6 மணி முதல் மேற்படி மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் இல்லத் திருமணவிழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.


இத்திருமண விழாவில் பிரபல பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சி, பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ வீரசக்கதேவி மகளிர் குழுவினரின் தேவராட்டம் மற்றும் பிரபல பேச்சாளரின் சொற்பொழிவுக்கும் மணமக்கள் வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர்.

சக்திவேல் ராஜன் - ரவீணா ஆகியோரின் திருமண வரவேற்பு மற்றும் சுபமுகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளையும், விருந்துனர்களை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான ஏற்பாடுகளையும்  மணமக்கள் வீட்டார் சிறப்பாக செய்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு S.Radhakrishnan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண