சமுதாய தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பும், சமுதாய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வதும் இவரின் தனிச்சிறப்பு.பள்ளி மாணவர்களில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், உயர் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுவதை கடமையாக கொண்டு செயல்படுபவர். அதுமட்டும் அல்லாது அவர்களை விளையாட்டுகளிலும் ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கி வந்துள்ளார். பாஞ்சாலங்குறிச்சி விழா மற்றும் மதுரையில் நடைபெறும் வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவிற்கு பல முறை வாகனம் மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்துகொடுத்து சமுதாய மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர்.அத்துடன் மதுரை மன்னர் கல்லூயில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளைக்கு 5000 ரூபாய் நன்கொடை வழங்கியும் சிறப்பு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மாவட்ட அரசியலில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு, தன் பேச்சாற்றாலால் தனிமுத்திரை பதித்தவரான திரு.காசிராஜன், இராஜகம்பள சமுதாயத்தில் புறக்கணிக்கமுடியாத வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களில் மிக குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இவர் இல்ல திறப்பு விழாவிற்கு வைகோ அவர்கள்(அமெரிக்காவில் இருந்ததால்) வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், பாராளுமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் அழகு சுந்தரம் ஆகியோரை தன் சார்பில் கலந்து கொள்ளச்செய்தது, கட்சியிலும், தலைமையிலும் திரு.காசிராஜனின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மகளிருக்கு ஒதுக்கப்பட்ட செட்டிகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக திருமதி.இராமலெட்சுமி காசிராஜன் அவர்கள் வெற்றி பெற தீவிர களப்பணியாற்றி வெற்றி கண்டவர்.
postgallery(248)
ஊராட்சி மன்ற தலைவரான தன் துணைவியாருக்கு உறுதுணையாக இருந்து, புதிய நூலகம், சிமெண்ட் சாலை,தார்ச்சாலை,பாலங்கள், வாய்க்கால்,குளம் ஆழப்படுத்தல்,குடி தண்ணீர் மேல்நிலை தொட்டி, குடி தண்ணீர் குழாய்,கைபம்ப்பு, பள்ளி காம்பவுண்ட்சுவர் , மயானம் கட்டுமானம் போன்ற பணிகளுடன் சிறப்பான நிர்வாகம் நடைபெறவும், சுகாதாரத்திற்காக மேதகு ஜனாதிபதி அவர்களின் “நிர்மல் கிராம் புரோஷ்கார் ” விருது பெறவும் முக்கிய காரணமாக இருந்தவர்.இதை அறிந்த வைகோ அவர்களும் பாராட்டி மகிழ்ந்தார்.
பாஞ்சாலங்குறிச்சி விழாவில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கலந்து கொண்ட விழா மேடையில் உணர்ச்சி பொங்க உரையாற்றி சமுதாய மக்களின் ஏகோபித்த பாராட்டுப் பெற்றவர். நாஞ்சில் சம்பத் மற்றும் வைகோ அவர்களின் உடன் பிறந்த தம்பி இரவிச்சந்திரன் ஆகியோரை தன் வீட்டுக்கு அழைத்து, விருந்தோம்பல் அளித்து அவர்களின் அன்பைப் பெற்றவர். பல பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியதால் இவரின் திறமையைக் கண்டு ஒன்றிய செயலாளர் பொறுப்பு தேடி வந்தபோதும் அதை ஏற்க மறுத்தார்.
பின்பு தேர்தல் கூட்டணி முடிவுகளால் அதிருப்தி கொண்டு தன் தாய் கழகமாம் அண்ணா திமுகவில் மீண்டும் இணைந்தார்.சிறந்த மேடைப்பேச்சாளரான திரு.காசிராஜன், கழக பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு தன் நாவன்மையால் கழக முன்னனித்தலைவர்களின் அன்பைப்பெருவதற்கு அதிககாலம்பிடிக்கவில்லை.
பேச்சாற்றலை மட்டுமே நம்பி அரசியலை தொடராமல், சாமானிய மக்களையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்து புரட்சி தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு அம்மா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் கழக ஆண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டு செயல்படுபவர். அதேபோல் இந்த இருபெரும் கழக தலைவர்களின் நினைவு நாளில் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவதையும் தொடர்ந்து செய்து வரும் வழக்கம் கொண்டவர். கட்சிப்பணியில் பலபரிமாணங்களில் பணியாற்றிய திரு.காசிராஜனுக்கு விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.
postgallery(248)
கிடைக்கும் வாய்ப்புகளிலும், வாய்க்கும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்திக்கொள்வது திறமையான அரசியல் வாதிக்கு அழகு. கம்பளத்தார் சமுதாயத்தில் அப்பொடியொரு திறமையுடையவரான திரு.காசிராஜன், 15-07-2018 இல் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பைப்பெற்றபொழுது, தமிழக முதல்வர் இவருக்கு கை கொடுத்து வாழ்த்தியது திரு.காசிராஜனின் திறமைக்கு சான்று.
2019 இல் நடந்த பாராளுமன்ற தேர்தல் பணியில் மண்டல பொறுப்பாளராக கூட்டணி வெற்றிக்காக தீவிர பணியாற்றினார். கடந்த 2019 – டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அருப்புக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கழக பொதுக்கூட்டங்களிலும், சமுதாய அமைப்புகளின் கூட்டங்களிலும் சிறப்பு பேச்சாளராக தொடர்ந்து பேசி வருகிறார்.
தற்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.நடந்து முடிந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் திரு வைகைச் செல்வன் அவர்களோடு சீரிய களப்பணி ஆற்றியவர். திரு.காசிராஜன் அவர்கள் அரசியலில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.