Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பேராசிரியர் கு.நா.சாமியின் அறிக்கை பக்குவமற்றது - பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் கடும் தாக்கு!

பேராசிரியர் கு.நா.சாமியின் அறிக்கை பக்குவமற்றது - பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் கடும் தாக்கு!

பேராசிரியர் கு.நா.சாமியின் அறிக்கை பக்குவமற்றது...

தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம் கு.நா.சாமி என்பவரின் அறிக்கையை வெளியிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன், இது போன்ற அறிக்கைகள் சமுதாயத்தை பலவீனப்படுத்த மட்டுமே செய்யும், அவர் சொல்லும் நியாயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அதற்காக கட்டபொம்மன் விழாவை புறக்கணியுங்கள் என்று கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது, அவரின் அறிக்கை மிகவும் கீழ்தரமானது கடும் கண்டனத்திற்கு உரியது.

DNT சலுகைகளை பெறுவது அரசு சம்மந்தப்பட்ட விசயம், இதற்காக கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் ? இவர் கற்றறிந்த பேராசிரியரா அல்லது போலி சான்றிதழ் பெற்று கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த பேராசிரியரா என்ற சந்தேகம் எழுகிறது, இவர் இதற்கு உண்மையான தீர்வை காண வேண்டும் என்று நினைத்தால் "தேர்தலை புறக்கணியுங்கள்" என்று கூறியிருக்க வேண்டும் அதை விடுத்து கட்டபொம்மன் விழாவை புறக்கணியுங்கள் என்று கூறுவதன் மூலம் இவர் சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.

கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் போன்ற அமைப்புகள், அறக்கட்டளைகள் போன்றவற்றின் மீது குறை கூற வேண்டும் என்றால் அந்த அமைப்புகளின் தலைவர்களிடமே தொலைபேசி வாயிலாக கருத்தை தெரிவித்திருக்கலாம், அல்லது கடிதம் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம், அதை விடுத்து கட்டபொம்மன் விழாவை புறக்கணிக்க சொல்வதன் மர்மம் என்ன ?

DNT போன்ற சலுகைகள், இடஒதுக்கீடு போன்றவை கம்பளத்தார் என்கிற தனிஜாதிக்கு மட்டும் உரித்ததல்ல, எத்தனையோ ஜாதிகள் இருக்கிறது அதில் நமது இனமும் ஒன்று அவ்வளவுதான், அதற்காக நமது இனத்தின் அமைப்புகளையோ, கட்டபொம்மன் விழாவையோ புறக்கணிக்க சொல்வதற்கு இப்பேராசிரியர் யார் ?

கட்டபொம்மனை பற்றியோ அவர்கள் செய்த தியாகத்தை பற்றியோ எதுவுமே தெரியாத அரைகுறையாக இருப்பவரால்தான் இதுபோன்ற அரைகுறை அறிக்கைகளை எழுத முடியும். தமிழ்நாட்டில் இப்போதுதான் நமது இனத்தவர்கள் அரசியல் ஞானம் பெற்றவர்களாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர், அதை பொறுக்காத ஞானசூனியங்கள் அனைத்து அமைப்புகளையும் மொத்தமாக குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் போன்ற அமைப்புகள் நமது இனத்திற்காக கால் நூற்றாண்டிற்கும் மேலாக இம்மண்ணில் உழைத்து வந்திருகிறார்கள், தனது இனத்தின் நலனிற்காகவும் கலாச்சாரத்திற்காகவும், பண்பாட்டு அடையாளங்களை காப்பதற்காகவும் தொடர்ச்சியாக பாடுபட்டு வந்திருக்கிறார்கள், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற பழமொழி போல் போகிற போக்கில் எதையாவது சொல்லி விட்டுச் செல்லும் அரைகுறைகளின் அறிக்கைகளை சமுதாயம் புறக்கணிக்க வேண்டும், இவரைப் போன்ற இனத்துரோகிகளை சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். 

                                                                                                                        நன்றி.


விமர்சகர்:

திரு.பெ.செந்தில்குமார், 

7299940159- பாஞ்சை போர்முழக்கம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு thottianaicker.com Thottianaicker

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண