Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாள்- எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாள்- எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாள் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விடுதலைக்களத்தின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் இன்று காலை மதுரையில் அமைந்துள்ள மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து, ஆண்ட பரம்பரை தேசிய இனங்களான OBC மக்களுக்கு மறுக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை வென்றெடுக்க வீரமுழக்கமிட்டார். அவருடன் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். 


கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அருகேயுள்ள வெள்ளியனையில் நடைபெற்ற வீரவணக்கநாள் நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீரவணக்கநாள் நிகழ்ச்சிகளும், OBC இடஒதுக்கீடு வீரமுழக்கமும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் வீரமுழக்கமெழுப்ப அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழுவும், தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Veerapandiya Kattabomman

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண