Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
“அதை நாங்கள் மறப்போமா” – கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி:-

“அதை நாங்கள் மறப்போமா” – கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி:-

“மறக்கமாட்டோம்” – கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி:-

அடையாளம் இழந்திருந்தோம்….. 

எங்கள் குல மாவீரனுக்கு பாஞ்சையிலே

கோட்டைகண்டு முகவரி தந்தாயே

அதை நாங்கள் மறப்போமா….

கால்நடை மேய்த்திருந்தோம்….

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றாக்கி

கல்லூரிக்கு கைபிடுத்துச் சென்றாயே

அதை நாங்கள் மறப்போமா…..

இனி எதுவும் செய்வதிற்கில்லை…

விவசாயமே வீணென்று விரக்தியாக இருக்கையில்

இலவச மின்சாரம் என ஒளிஏற்றி வைத்தாயே

அதை நாங்கள் மறப்போமா……

மாரி மழை பெய்யவில்லை….   

மானமுள்ள விவசாயி மாண்டே போயிருப்பர்   

கடன் தள்ளுபடி செய்திட்டு கரையேற்றிவிட்டாயே

அதை நாங்கள் மறப்போமா….

குண்டுமணியளவு கழுத்திலில்லை….

கல்லூரி கட்டணத்திற்கு தாலிகூட மிஞ்சவில்லை

கட்டியவன் கவலையுற்றான் கடவுளாக கைகொடுத்தாய்

அதை நாங்கள் மறப்போமா…

  • எதை மறப்போம்…..
  • எங்கள் முகவரியில் நீ…
  • எங்கள் அடையாளத்தில் நீ…
  • எங்கள் ஊணில் நீ….
  • எங்கள் உதிரத்தில் நீ… 
  • எங்கள் உயிரில் நீ...
  • எங்கள் உணவில் நீ... 
  • எங்கள் கல்வியில் நீ…
  • எங்கள் வளர்ச்சியில் நீ... 
  • எங்கள் மன்னவன் கோட்டையிலும் நீ…
  • எங்கள் மங்கையர் தங்கத்திலும் நீ...
  • எதைவிட  எதைச்சொல்ல.... 
  • எம்மினத்தில் எங்கெங்கும் நீ…
  • எப்படி மறப்போம்....

ஆம் கலைஞரே…

நன்றி மறந்த இனம் நாயக்கரினமல்ல

நாயக்கர் இனம் என்றும்

நன்றிமறப்பதில்லை…..

என்றென்றும் தங்கள் நினைவில்…

ஈச்சனாரி.G.மகாலிங்கம் - 9345224557


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Eachanary Mahalingam

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண