Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஓ.பி.சி-யினருக்கு வழங்கவேண்டிய இடஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்துக!!! - தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஓ.பி.சி. அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டம்.

ஓ.பி.சி-யினருக்கு வழங்கவேண்டிய இடஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்துக!!! - தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஓ.பி.சி. அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டம்.

மத்திய அரசுப்பணிகளிலும், கல்வியிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) வழங்கப்படவேண்டிய இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற வலியுறித்தியும், ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், சர்மா கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வலியுறுத்தியும் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் உள்ளிட்ட ஓ.பி.சி அமைப்புகள் இன்று (18.07.2020) போராட்டம் நடத்தியது.

நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பட்டக்காரர் திரு.நடராஜ் அவர்கள் தலைமையிலும் வீடுகளுக்கு முன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இராசிபுரம், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைக்களம் திரு.கொ.நாகராஜன் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் திரு.மு.அன்பழகன், இராசிபுரம் ஒன்றிய செயலாளர் திரு.தமிழரசு,  தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Viduthalaikkalam Ko.nagarajan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண