Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
 "உள்ளாட்சி பிரதிநிதிகள்-அரசியல் கட்சி தலைவர்களே! மாணவ-மாணவிகள்  DNT-சான்றிதழ் பெற உதவிடுக!!

"உள்ளாட்சி பிரதிநிதிகள்-அரசியல் கட்சி தலைவர்களே! மாணவ-மாணவிகள் DNT-சான்றிதழ் பெற உதவிடுக!!

பகிர்:

அன்புள்ள இராஜகம்பள சமுதாய ஊராட்சி மன்றத் தலைவர்களே,  உள்ளாட்சி பிரதிநிதிகளே, அரசியல்கட்சி தலைவர்களே வணக்கம். 

வழிகாட்டும் நாமக்கல் மாவட்டம்.

தமிழகத்திலுள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் சமுதாயம் மக்கள் DNT சான்றிதழ் பெற தகுதி பெற்றவர்கள். DNT- சான்றிதழ் பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. (இதுபற்றி விரிவான தகவல்களை அறிய நீலநிற எழுத்தில்  " செய்தி துணுக்குகள்" விரல் வைக்கவும்) தமிழக அரசும்கூட  சமீபத்தில் கொரோனா நிவாரணநிதியாக ரூ.2000/- வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்திற்கு மிக அத்தியவசியமான DNT சான்றிதழை, நமது சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பொதுவாழ்வில் உள்ளவர்கள் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் அம்மாவட்ட மாணவ-மாணவியருக்கு DNT-சான்றிதழ் பெறும் முயற்சி கடந்த 22.05.2020-ல் தொடங்கப்பட்டு, இன்று 16.06.2020-ல்,  திரு.பாலாஜி மற்றும் திரு.நா.ப.விக்னேஷ் ஆகியோர்களுக்கு பெற்றதின் மூலம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இதையடுத்து,  மாவட்டம் முழுதும் சான்றிதழ் பெறும் பணியை தீவிரப்படுத்துகிறார்கள் "அறக்கட்டளை நிர்வாகிகள்". 

இதுபற்றி தகவல்/ஆலோசனை வேண்டுவோர் : 1. திரு.பழனிச்சாமி (அறக்கட்டளை தலைவர், நாமக்கல் -9976064000) 2.திரு.மணி (Rtrd VAO-9894099124)  ஆகியோரையோ அல்லது தொட்டிய நாயக்கர் இணையதள எண்ணான 7395988767 எண்ணிலோ காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்.



மேலே திரு.பாலாஜி மற்றும் திரு.விக்னேஷ் அவர்களின் DNT சான்றிதழ் இணைப்பட்டுள்ளது.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு DNT Certificate for Thottia Nayakkar Community

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண