Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
மத்திய அரசின் சட்ட அலுவலராக இராமர் குருசாமி நியமனம்!

மத்திய அரசின் சட்ட அலுவலராக இராமர் குருசாமி நியமனம்!

விருதுநகர் மாவட்டம், சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் இராமர் குருசாமி M.A., B.L., மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு,

விருதுநகர் மாவட்டம் எரிச்சனத்தம் அருகேயுள்ள சீல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. குருசாமி - திருமதி. வளர்மதி அம்மாள் தம்பதியினரின் மகன்களில் ஒருவர் திரு. கு.இராமர். ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், புகழ்பெற்ற வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் அவர்களிடம் ஜூனியராகவும், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது 'குரு அசோசியேட்ஸ்' என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கி உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி வருகிறார். 

நோட்டரி பப்ளிக் நியனத்திற்கான தகுதியைப் பெற்றிருந்த நிலையில் மத்திய அரசு நோட்டரி பப்ளிக் ஆங்கீகாரத்திற்காக கடந்த 2021-இல் இராமர் குருசாமி விண்ணப்பித்திருந்தார். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியுடைய 3617 பேர்களைத் தேர்வு செய்து மத்திய சட்ட அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இராமர் குருசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இப்பட்டியலில் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த மூவர் இதுவரை நோட்டரி பப்ளிக் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள இராமர் குருசாமி அவர்களுக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Ramar thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண