Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
நன்கொடையாளர் திரு,நம்பிராஜ் இல்லத் திருமணவிழா!

நன்கொடையாளர் திரு,நம்பிராஜ் இல்லத் திருமணவிழா!

இல்லற வாழ்வில் இணையேற்கும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளரும், ஈரோடு மாவட்ட திமுக பிரமுகருமான திரு,நம்பிராஜ் இல்லத் திருமண வரவேற்பு விழா இன்று நடைபெறுவதையொட்டி, மணமக்களுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சதுமுகை அருகேயுள்ள தொண்ணேரங்கனூரைச் சேர்ந்தவர் திரு.நம்பிராஜ் (எ) எஸ்.டி.பழனிச்சாமி. வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளரான திரு.நம்பிராஜ் அவர்கள், பால முருகன் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதோடு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராகவும் இருந்துவருகிறார். திரு.நம்பிராஜ் - திருமதி.வைஜெயந்தி ஆகியோரின் அன்புமகன் ப.கோகுல் பிரசாத் B.E., D.Co op.,  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு.செல்வராஜ் - திருமதி.நிர்மலா ஆகியோரின் அன்புமகள் செ.அனுரூபா B.Sc., ஆகியோரது திருமணம் 20.02.2026, வெள்ளிக்கிழமை மாரனூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெறவுள்ளது.


முன்னதாக இன்று (19.02.2026, வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் சத்தியமங்கலம் அத்தாணி சாலையிலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பவுல்ராஜ், திரு.தங்கராஜ், திரு.பங்காருராஜ், திரு.மோகன், வழக்கறிஞர் திரு.சுரேஷ்குமார், திரு.விஜயகுமார், திரு.சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான  திரு.கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Nabiraj thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண